Tamil Entrepreneurs

மதுரையில் ரூ 600 கோடி மதிப்பில் புதிய டைடல் பார்க் ;10,000 பேருக்கு வேலை! – முதலமைச்சர் அறிவிப்பு| South zone small industries conference at madurai


மதுரையில் இயங்கிவரும் 50,000 குறு, சிறு நிறுவனங்கள் மூலம் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது.

தமிழகத்தில் புவிசார் குறியீடு பெற்ற 42 பொருட்களில் 18 பொருட்கள் தென் மாவட்டங்களை சேர்ந்தவை. இந்த பொருட்களுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளதால், தொழில் நிறுவனங்கள் இவற்றை அதிகம் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்ய வேண்டும்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நாட்டில் எளிதாக தொழில்புரிவோர் பட்டியலில் 14-வது இடத்தில் இருந்து 3-வது இடத்திற்கு தமிழ்நாடு வந்துள்ளது. அடுத்து முதல் இடத்தைப் பெறுவதுதான் இலக்கு.

தமிழகத்தை 2030-ம் ஆண்டுக்குள் 1 ட்ரில்லியன் அமெரிக்கன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக மாற்றும் நோக்கில் அரசு இயங்கி வருகிறது. தொழில் வளர்ச்சிக்குத் தேவையான கொள்கைகளை வகுப்பதற்கு தரவுகளுக்காக ஒன்றிய அரசின் சிறு, குறு நிறுவனங்கள் துறையும் தமிழக சிறு, குறு நிறுவனங்கள் துறையும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகிறது.

டைடல் நிறுவனம் மதுரை மாநகராட்சியுடன் இணைந்து புதிய டைடல் பார்க் அமைக்க உள்ளது. மாட்டுத்தாவணி பகுதியில் இரண்டு கட்டமாக 10 ஏக்கரில் தொடங்கப்படுகிறது. இதற்கு முதல் கட்டமாக 600 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யபடுகிறது. இதன் மூலம் 10000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்” என்றார்.



Source link

Leave a Reply

Your email address will not be published.