Health

மாநிலங்களவை எம்பியாக பதவியேற்றார் இளையராஜா | Movies News in Tamil

புதுடெல்லி: தமிழ் திரையிசையின் அடையாளத்தை மாற்றிய இசைஞானி இளையராஜாவின் அடுத்தக் கட்ட பயணம் இன்று தொடங்கியது. மாநிலங்களவை உறுப்பினராக தனது நியமிக்கப்பட்ட இளையராஜா, இன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் பதவியேற்றுக் கொண்டார்.  மாநிலங்களவை எம்பியாக பதவியேற்றார் இளையராஜா… குடியரசுத் தலைவர் பதவியேற்றுக் கொண்ட நாளில், இசை அரசரும் பதவியேற்றார். சாதாரண பின்னணியில் இருந்து வந்த இளையராஜா பல சாதனைகளை படைத்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்த நிலையில், இன்று மாநிலங்களவையில் தமிழில் உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்.  

மனித உணர்வுகளை இசையின் வாயிலாக பிரதிபலித்தவர் இளையராஜா. அவரை மாநிலங்களவை எம்.பியாக நியமிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன், என்று இளையராஜாவை நியமித்தபோது பிரதமர் குறிப்பிட்டிருந்தார்.  தமிழகத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை பி.டி.உஷா மாநிலங்களவை உறுப்பினராக சில நாட்களுக்கு முன்னரே பதவி ஏற்றுக் கொண்டார்.  

இளையராஜா எம்.பியாக நியமனம் செய்யப்பட்டதற்கு பல்வேறு விமர்சனங்களும் எழுந்தன. பிரதமர் மோடியை புகழ்ந்ததற்காக இளையராஜாவுக்கு இந்தப் பரிசு கிடைக்கும் என்பது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது என்ற கருத்துக்களும் வெளிப்படுத்தப்பட்டன.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Source link

Leave a Reply

Your email address will not be published.