ஆயிரம் இருந்தாலும் அப்பாவின் பாசத்திற்கு ஈடு இணையாகாது. 10 மாதம் சுமந்து பெற்றெடுப்பது அம்மாவாக இருந்தாலும், பள்ளி, கல்லூரிகளில் படிக்க வைத்து கரையேற்றுவது வரை அப்பாவின் கடமைகள் அளவில்லாதது. பிள்ளைகள் தவறு செய்தால் கண்டிப்பது,அவர்கள் வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் போது தோள் கொடுப்பது தந்தையாக தான் இருக்கும்.
எந்தத் தடைகள் வந்தாலும், ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகளுக்குத் தேவையானவற்றை செய்ய எப்போதும் முயற்சி செய்கிறார்கள். தனக்கு கிடைக்காத, பார்க்காத விஷயங்கள் அனைத்தையும் தனது பிள்ளைகள் அனுபவிக்க வேண்டும் என நினைக்கிறார்கள். அப்படிப்பட்ட வீடியோ ஒன்று தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பெற்றோர் தனது குழந்தைகளுக்காக எதையும் செய்வார்கள் என்பதை நிரூபிக்கிறது.
Also Read : ரூபாய் நோட்டுகளில் இந்த சாய்ந்த கோடுகள் இருப்பதற்கு காரணம் என்ன தெரியுமா?
ஐஏஎஸ் அதிகாரியான சோனல் கோயல் என்பவர் தனது ட்விட்டர் பகிர்ந்துள்ள வீடியோவில், மாற்றுத்திறனாளி ஒருவர் தனது மூன்று சக்கர சைக்கிளில் முன்புறத்தில் தனது மகனையும், பின்புறத்தில் மகளையும் அமர வைத்து பள்ளிக்கு அழைத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது. இரண்டு பிள்ளைகளையும் வைத்துக் கொண்டு வேகாத வெயிலில் தனது மொத்த சக்தியையும் செலுத்தி அவர் தனது கைகளால் சைக்கிள் பெடலை செலுத்தும் காட்சிகள் காண்போர் கண்களை குளமாக்கியுள்ளது.
पिता 🙏🏻 💕 pic.twitter.com/w3buFI6BpR
— Sonal Goel IAS (@sonalgoelias) May 23, 2022
இந்த வீடியோ எங்கு படமாக்கப்பட்டது என்பது குறித்த எவ்வித தகவலும் இல்லாவிட்டாலும், இணையத்தில் பலரது இதயங்களையும் கவர்ந்திழுத்து வருகிறது. தன்னால் நடக்க முடியாது என்றாலும் தனது பிள்ளைகளை மூன்று சக்கர வண்டியில் அமரவைத்து, வெயிலில் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது. மாற்றுத்திறனாளியாக இருந்தபோதிலும், அந்த நபர் விரக்தியடையாமல், தனது கைகளால் சைக்கிளை செலுத்தி பள்ளிக்கு விரைவது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
தந்தை தனது இயலாமை தனது குழந்தைகளின் எதிர்காலத்திற்கு இடையூறாக இருக்க விடாமல், அவர்களுக்கான தனது கடமையை முறையாக நிறைவேற்றுகிறார். அவர் ஒரு சிறிய மூன்று சக்கர வண்டியை வைத்திருந்தாலும், அவர் தனது குழந்தைகள் வசதியாக அமர்ந்து பள்ளிக்கு வருவதை உறுதி செய்கிறார்.
இந்த ட்விட்டர் வீடியோ சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது. இதுவரை இந்த வீடியோ 1.4 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. எவ்வளவு துயரங்களை எதிர்கொண்டாலும் மனம் தளராமல் கடினமாக உழைக்க வேண்டும் என்ற தந்தையின் உறுதியை பலரும் பாராட்டியுள்ளனர். ‘இவர் ஒரு பொறுப்பான தந்தை’ என நெட்டிசன்கள் நெகிழ்ச்சியுடன் பாராட்டியுள்ளனர். சிலரோ இந்த வீடியோவை பிள்ளைகளுக்காக பாடுபடும் பெற்றோருக்கு சமர்ப்பிப்பதாக தெரிவித்துள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.