Tamil Entrepreneurs

மீண்டும் பழைய பென்சன் திட்டம்: 3 மாநிலங்களைத் தொடர்ந்து பஞ்சாப் அரசு அமல்படுத்த திட்டம் | punjab cabinet approves old pension scheme


பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டுவருவதற்கு பஞ்சாப் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஏற்கெனவே ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

பழைய ஓய்வூதியத்தைத் திட்டத்தை அமல்படுத்த வேண்டுமென அரசு ஊழியர்கள் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் கோரிக்கை எழுப்பி வருகின்றனர். பழைய ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வுபெற்றவர்களுக்கு மாதாமாதம் அவர்கள் கடைசியாக வாங்கிய மாத ஊதியத்தில் அதிகபட்சம் பாதியளவு தொகை கிடைக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வந்தது. இந்த ஓய்வூதியத் திட்டம் 2003 டிசம்பர் மாதத்தில் ரத்து செய்யப்பட்டது.

ஓய்வூதியம்

ஓய்வூதியம்
சித்தரிப்பு படம்

அதையடுத்து புதிய ஓய்வூதியத் திட்டம் கொண்டு வரப்பட்டு 2004 ஏப்ரலில் அமல்படுத்தப்பட்டது. இதில் அரசு ஊழியர்கள் தங்களின் ஊதியத்தில் ஒரு பகுதி பிடித்தம் செய்யப்பட்டு ஓய்வூதிய நிதியில் சேமிக்கப்படும். ஓய்வுபெறும்போது மொத்தமாக தொகுப்பு நிதியாக வழங்கப்படும்.



Source link

Leave a Reply

Your email address will not be published.