சில சமயம், கொண்டாட்டங்களுக்கு உறுதியான காரணம் எதுவும் தேவையில்லை. நாம் இப்போது கொண்டாட வேண்டும் என்ற ஆசை ஒன்றே போதுமானது. அப்படியொரு நிகழ்வு அண்மையில் நடைபெற்றுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம், ராட்லாம் ரயில் நிலையத்தில் கடந்த புதன்கிழமை இரவு அரங்கேறிய இந்த நிகழ்வு குறித்து, பத்திரிகையாளர் ஒருவர் சமூக ஊடகங்களில் வீடியோ பகிர்ந்துள்ளார்.
பந்த்ரா – ஹரித்வார் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகள் இந்த கொண்டாட்டத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றனர். திட்டமிட்ட நேரத்திற்கு 20 நிமிடம் முன்னதாக, தங்கள் நிலையத்திற்கு ரயில் வந்ததை இவர்கள் கொண்டாடி தீர்த்துள்ளனர். ராட்லாம் ரயில் நிலையத்தில் ரயில் பொதுவாக 10 நிமிடம் நிற்குமாம். அது மட்டுமின்றி விரைவாகவும் வந்து விட்டதால் இடைப்பட்ட நேரம் போர் அடிக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த கொண்டாட்டத்தை அரங்கேற்றினர்.
மொபைல் ஃபோனில் பாட்டு போட்டு நடனம்
ரயில் நிலையத்தில் முதலில் ஒரு சில பயணிகள் மட்டுமே நடனம் ஆடிக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் சக பயணிகள் நிறைய பேர் அதில் இணைந்து கொண்டனர். இதுகுறித்து பத்திரிகையாளர் சுதிர் ஜெயின் டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “ராட்லாம் ரயில் நிலையத்தில் பயணிகள் நடைமேடையில் கர்பா நடனம் ஆடுகின்றனர். ரயில் வெகு விரைவாகவே வந்துவிட்டது. இதனால், போர் அடிக்கிறது என கருதிய பயணிகள் அதை போக்கும் வகையில் நடனம் ஆடினர்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
ரயில் நிலையத்திற்கு நீங்களாகவே முன்னதாக வந்துவிட்டாலும் கூட போர் அடிக்கும் என்று கவலை கொள்ள தேவையில்லை. தனியாகவோ அல்லது வேறு யாருடனும் சேர்ந்து நடனம் ஆடத் தொடங்கி விடலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
“प्लेटफार्म पर गरबा”#रतलाम– स्टेशन पर खड़ी #ट्रैन में अगर आप बोर हो रहे है,तो बोरियत खत्म करने का इससे नायाब उदाहरण और कुछ नही हो सकता.देर रात समय से पहले ट्रैन #रतलाम रेलवे स्टेशन पर पहुंच गई तो यात्रियों ने #प्लेटफॉर्म पर ही गरबा करना शुरू कर दिया,यह देखकर सभी आन्नदित हो उठे pic.twitter.com/csoE2VDRmD
— vikas singh Chauhan (@vikassingh218) May 26, 2022
எங்கெங்கும் இதுபோல நடனம்…
இந்தியாவில் மட்டும் தான் மக்கள் இதுபோல திடீர் கொண்டாட்டங்களில் ஈடுபடுகின்றனர் என்றில்லை. சமீபத்தில், அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் ஸ்கொயர் பகுதியில் ஹிந்தி திரைப்பட பாடலுக்கு அங்குள்ள பெண் ஒருவர் நடனமாடினார். அவ்வழியாக சென்று கொண்டிருந்தவர்களும் கூட, அவர் நடனமாடுவதைப் பார்த்து உற்சாகமாகி உடன் இணைந்து ஆடத் தொடங்கி விட்டனர்.
நாளுக்கு, நாள் உலகம் இயந்திரம் போல மாறி வரும் நிலையில், நமக்கான பணிச்சுமை மற்றும் மன பாரம் அதிகரித்துக் கொண்டே போகிறது. அதில் இருந்து வெளிவரும் நோக்கில், நாமும் இதுபோல நடனம் ஆடலாம். பொது இடத்தில் கூச்சமாக இருந்தால், வீட்டில் இதை முயற்சி செய்யலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.