Tamil Entrepreneurs

ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி! இந்தியாவுக்கு ரூ.35,000 கோடி லாபம்…! | Crude oil import from Russia! Rs.35,000 crore profit for India…!


கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதியிலிருந்து உக்ரைன் ரஷ்ய போர் தொடங்கியதிலிருந்து, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து இந்தியா ரூ.35,000 கோடி லாபம் ஈட்டியுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.

அமெரிக்கா உள்பட உலக நாடுகள் ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்ததன் காரணமாக ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதித்திருந்தது. இதனால் ரஷ்யப் பொருளாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில், முக்கியமான சில ஏற்றுமதி பொருள்களின் விலையைக் குறைத்து விற்றது. இதை சாதகமாக பயன்படுத்தி இந்தியா, ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்தது.

கச்சா எண்ணெய்

கச்சா எண்ணெய்

இந்தியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா உள்பட சில உலக நாடுகள் எதிர்த்தாலும், இந்தியா அதற்கான விளக்கத்தைத் தந்து, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதில் இருந்து பின்வாங்கவில்லை.

நமக்குக் கிடைக்கும் புள்ளிவிவரங்களின்படி, சீனாவுக்கு அடுத்தப்படியாக ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. போருக்கு முன்னதாக 1 சதவிகிதத்துக்கும் குறைவாக ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்த இந்தியா, போருக்குப்பின் 12% இறக்குமதி செய்து வருகிறது.



Source link

Leave a Reply

Your email address will not be published.