Covid-19

“வருகிறது மங்கி பாக்ஸ் வேக்சின்!” உயரும் குரங்கு அம்மை பாதிப்பு.. சீரம் எடுத்த அதிரடி முடிவு | Amid Monkeypox Worry, What Adar Poonawalla Said On Making Vaccine

Delhi

oi-Vigneshkumar

Google Oneindia Tamil News

டெல்லி: உலகெங்கும் மங்கி பாக்ஸ் பாதிப்பு வேகமாகப் பரவ தொடங்கி உள்ள நிலையில், இதற்கான வேக்சின் குறித்து சீரம் நிறுவனத் தலைவர் ஆதார் பூனாவல்லா சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

பெரும் போராட்டத்திற்குப் பின்னர், உலக நாடுகள் இப்போது தான் கொரோனா பாதிப்பில் இருந்து மெல்ல மீண்டு வருகிறது. கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றனர்.

இந்தச் சூழலில் திடீரென மங்கி பாக்ஸ் பரவ தொடங்கியுள்ளது உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது மற்றொரு ஊரடங்கிற்கு வழிவகுக்குமா என்ற அச்சம் எழுந்துள்ளது.

ராஜ்யசபா: திமுகவின் 6 எம்.பிக்கள் உட்பட 19 பேர் அதிரடி சஸ்பெண்ட்- ஒருவாரம் சபைக்கு வர தடை!ராஜ்யசபா: திமுகவின் 6 எம்.பிக்கள் உட்பட 19 பேர் அதிரடி சஸ்பெண்ட்- ஒருவாரம் சபைக்கு வர தடை!

 மங்கி பாக்ஸ்

மங்கி பாக்ஸ்

மங்கி பாக்ஸ் என்பது கோவிட்-19 போல புதிய வைரஸ் இல்லை. இவை ஆப்பிரிக்காவில் ஏற்கனவே எண்டமிக்காக இருந்த வைரஸ் தான். இருப்பினும், ஆப்பிரிக்காவுக்கு வெளியே இந்த பாதிப்பு பரவுவது இதுவே முதல்முறையாகும். இதற்கான காரணத்தை ஆய்வாளர்கள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். சில மாதங்களில் உலகில் பல ஆயிரம் பேருக்கு மங்கி பாக்ஸ் பரவியுள்ள நிலையில், இதைச் சர்வதேச பொதுச் சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

 ஆதார் பூனவல்லா

ஆதார் பூனவல்லா

இந்தியாவிலும் இதுவரை கேரளாவில் 3 பேருக்கும் டெல்லியில் ஒருவருக்கும் மங்கி பாக்ஸ் கண்டறியப்பட்டுள்ள நிலையில், வேக்சின் குறித்த கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து சீரம் நிறுவனத் தலைவர் ஆதார் பூனவல்லா கூறுகையில், “சில லட்சம் டேனிஷ் பெரியம்மை தடுப்பூசி டோஸ்களை நாங்கள் சொந்த செலவில் இறக்குமதி செய்து வருகிறோம். இந்தியாவில் மங்கி பாக்ஸ் பாதிப்பு அதிகமாக இருந்தால் இந்த வேக்சினை நாம் பயன்படுத்தலாம்.

 வேகிசன் இறக்குமதி

வேகிசன் இறக்குமதி

இது தொடர்பாகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம். பெரியளவில் பாதிப்பை ஏற்படும் போது அதைச் சமாளிக்க மற்ற நாடுகளைப் போல நாமும் இப்போதே வேக்சினை வாங்கி வைக்க வேண்டுமா என்பதை நமது அரசு வல்லுநர்களுடன் இணைந்து பேசி முடிவெடுக்க வேண்டும். இப்போது நான் சொந்த செலவில் சிறிய அளவில் வேக்சினை இறக்குமதி செய்கிறது. இந்த விவகாரத்தில் அரசு விரைவாகக் கொள்கை அளவில் முடிவெடுக்க வேண்டும்” என்றார்.

 சில மாதங்கள்

சில மாதங்கள்

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் மங்கி பாக்ஸ் பாதிப்பு பெரியளவில் ஏற்பட்டால், அதைத் தடுக்க தேவையான வேக்சின்களை ஒட்டுமொத்தமாகக் கொள்முதல் செய்து அதைச் சந்தைப்படுத்தும் திறனை சீரம் நிறுவனம் பெற்றுள்ளது. டென்மார்க் நிறுவனமான பவேரியன் நோர்டிக் தயாரித்த பெரியம்மை தடுப்பூசியை இறக்குமதி செய்வது தொடர்பான ஒப்பந்தத்தில் சீரம் கையெழுத்திட்ட பின்னர், விரைவில் இறக்குமதி தொடங்கும்.

 ஏன் இப்போதே இறக்குமதி

ஏன் இப்போதே இறக்குமதி

ஆதார் பூனவல்லா மேலும் கூறுகையில், “திடீரென சுகாதார நெருக்கடி நிலை ஏற்படும்போது, அவர்களின் (டென்மார்க் நிறுவன பெரியம்மை வேக்சின்) தடுப்பூசியைப் பயன்படுத்தும் நிலையில் நாங்கள் தயாராக வைத்திருப்போம். அதற்கு வேக்சின் சோதனை முடிந்து இருக்கும் என்பதால் எவ்வித அது பாதுகாப்புச் சிக்கல்கள் இல்லாமல் இந்தியர்களுக்கு அது கிடைக்கும். ஒரு வேக்சினை தொடக்கத்தில் இருந்து உருவாக்கக் கொஞ்சக் காலம் பிடிக்கும். ஆனால், இந்தச் சூழலில் ஒட்டுமொத்த ஆர்டர் மொதுமானதாகவே இருக்கும்.

 புது வேக்சின்

புது வேக்சின்

இந்தியாவில் வெகு சிலருக்கு மட்டுமே மங்கி பாக்ஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளது. எனவே பெரியம்மை வேக்சினை இறக்குமதி செய்வது குறித்து அரசு இன்னும் எவ்வித முடிவையும் எடுக்கவில்லை. சீரம் நிறுவனம் நோவாவாக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து மங்கி பாக்ஸுக்கு புதுவித மெசஞ்சர் ஆர்என்ஏ (எம்ஆர்என்ஏ) தடுப்பூசியை உருவாக்குவது குறித்து ஆராய்ந்து வருகிறது. புதிய வேக்சினை உருவாக்கக் குறைந்தது ஒரு ஆண்டிற்கு மேல் ஆகலாம்.

 சில மாதங்கள்

சில மாதங்கள்

இதற்கான தேவை இருக்குமா அல்லது மங்கி பாக்ஸ் குறைந்துவிடுமா என்பது இன்னும் சில மாதங்களில் தெரிந்துவிடும். மங்கி பாக்ஸ் பரவ தொடங்கி உள்ளது புதிரானது எல்லாம் இல்லை. மங்கி பாக்ஸ் நம்மைச் சுற்றிப் பல ஆண்டுகளுக்கு இருக்கிறது. இப்போது ஒரே வித்தியாசம் என்னவென்றால், கொரோனா காரணமாக உலக நாடுகளின் சுகாதார அமைப்புகள் அதிக பயிற்சி பெற்றதாக உள்ளன” என்றார்.

English summary

Adar Poonawalla says monkeypox vaccine will take atleast one year: (மங்கி பாக்ஸ் வேக்சின் குறித்து சீரம் நிறுவனத் தலைவர் ஆதார் பூனவல்லா) Monkeypox cases raising around the world

Source link

Leave a Reply

Your email address will not be published.