Memes
oi-Jaya Chitra
சென்னை: ஞாயிற்றுக்கிழமையைப் பற்றிய கனவுகளையும், திங்கட்கிழமை பற்றிய புலம்பல்களையும் மீம்ஸ்களாக சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை வரப் போகிறதென்றாலே வேலை பார்ப்பவர்கள் மட்டுமல்ல.. குழந்தைகளுக்கும் குதூகலம் வந்து விடும். அந்த ஒருநாள் விடுமுறைக்காகத்தான் வாரம் முழுவதும் எல்லோரும் உழைக்கிறார்கள். எனவே அந்த ஒருநாளைப் பற்றிய எதிர்பார்ப்பு எப்போதுமே அதிகமாக இருக்கும்.
ஆளுக்கும், வயதுக்கும் தகுந்தமாதிரி ஒவ்வொருவரின் ஞாயிறு கமிட்மெண்ட்களும் இருக்கும் . கிரிக்கெட் விளையாட வேண்டும், கறிச்சோறு சாப்பிட வேண்டும், மதியம் தூங்க வேண்டும், ஷாப்பிங் செல்ல வேண்டும் என ஞாயிற்றுக்கிழமைகளுக்கென மட்டும் ஆயிரம் திட்டங்கள் வைத்திருப்பார்கள். நினைத்ததில் பாதி வேலையைக்கூட முடித்திருக்க மாட்டார்கள். ஆனால் கண்ணை மூடித் திறப்பதற்குள் ஞாயிறு முடிந்து விடும்.
‘இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை’.. Code word denied.. உப்புமாவையும், ஊறுகாயையும் சத்தமில்லாமச் சாப்பிடு!
அதன்பிறகு இதோ இந்த மீம்ஸ்கள் போல், ‘ஞாயிறு முடிந்து விட்டது, திங்கள் வந்து விட்டது’ என சமூகவலைதளங்களில் புலம்ப ஆரம்பித்து விடுகிறார்கள்.
இதோ அப்படியாக சில நகைச்சுவையான மீம்ஸ்கள் உங்களுக்காக…







English summary
These are some jolly memes collections on Sunday routine.
Story first published: Sunday, July 31, 2022, 16:23 [IST]