Tamil Entrepreneurs

‘விஜயானந்த்’… கர்நாடக முதல்வர் வெளியிட்ட சினிமா ட்ரைலர்… யார் இந்த விஜய் சங்கேஸ்வர்? | Vijayanand movie tells the story of Vijay Sankeshwar, the founder of India’s largest logistics company.


கர்நாடக மாநிலம் கடாக் பகுதியில் பிறந்து, பி.காம்., பட்டம் பெற்றவர். 19-வது வயதில் தந்தையின் கடும் எதிர்ப்புக்களை கடந்து, 1976-ல், ஒரே ஒரு லாரியை விலைக்கு வாங்கி, ‘விஜய் டிரான்ஸ்போர்ட்’ என்ற போக்குவரத்து சேவை நிறுவனத்தைத் துவங்கினார். நேரம், காலம் பார்க்காத கடுமையான உழைப்பு, நேரம் தவறாமை, ‘கஸ்டமர்களை’த் திருப்திப்படுத்துவதே முதன்மைப்பணி என சுற்றிச் சுழன்று வேலை பார்த்தார்.

விளைவு, கைநிறைய வருமானம், மனதெல்லாம் பெருங்கனவு. ‘சரி அடுத்த கட்டத்துக்கு போவோம்,’ என, சில ஆண்டுகளிலேயே புதிய வாகனங்கள் வாங்குவது, கர்நாடகாவின் பெங்களூரு, ஹப்ளி, பெங்காம் பகுதிகளுக்கு போக்குவரத்துச் சேவை வழங்குவது என அவரின் கனவைப் போல, தொழிலும் விரிவடைந்தது.

விஜய் சங்கேஸ்வர் கம்பெனி

விஜய் சங்கேஸ்வர் கம்பெனி

நிறுவனத்துக்கு ‘வி.ஆர்.எல் லாஜிஸ்டிக் லிமிடெட்’ என, பெயரையும் மாற்றினார், தனது மகன் ஆனந்த் சங்கேஸ்வரரை தொழிலில் இழுத்தார். தந்தையும், மகனும் இணைந்து இந்தியா முழுவதிலும் தற்போது 956 கிளைகள் வாயிலாக, 15 ஆயிரம் பணியாளர்களை வைத்து, 4,816 சரக்கு வாகனங்கள், 295 பயணியர் வாகனங்கள் என ஆண்டுக்கு, 2,100 கோடிக்கு மேல் ‘டர்ன் ஓவர்’ செய்து, போக்குவரத்துச் சேவை உலகில் கொடி கட்டி பறக்கிறார்.

நாடு முழுவதிலும் இவரது வாகனங்கள், சரக்கு போக்குவரத்து மற்றும், சென்னை – பெங்களூரு, கோவா, கேரளா உள்பட நாட்டின் பல பகுதிகளை இணைக்கும் மக்கள் போக்குவரத்து சேவை வழங்கி வருகின்றனர். வி.ஐ.பிக்களுக்குத் தனி விமான சேவையும் வழங்கி வருகின்றனர்.



Source link

Leave a Reply

Your email address will not be published.