Tamil Entrepreneurs

வீட்டில் இருந்தே பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம்! அரசு அலுவலகம், இ-சேவை மையம் செல்ல வேண்டாம்! | Apply for belt change from home! Do not go to government office, e-service center!


தமிழ்நிலம் (https://tamilnilam.tn.gov.in) எனும் இணையதளம் மூலம் இனி பட்டா மாறுதல்களுக்கு வீட்டிலிருந்தே இணையத்தளத்தில் விண்ணப்பித்து கொள்ளலாம். இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். 

இணையதளம் மூலம் இனி பட்டா மாறுதல் | முதல்வர் தொடங்கி வைத்தார்.

இணையதளம் மூலம் இனி பட்டா மாறுதல் | முதல்வர் தொடங்கி வைத்தார்.

சொத்து வாங்குபவர்கள் அந்தச் சொத்தை தன் பெயருக்கு பத்திரப்பதிவு செய்த உடன், அடுத்தபடியாக, அந்தச் சொத்தின் பட்டாவை மாற்றம் செய்ய வேண்டும். சொத்து பதிவின் போதே பட்டா மாறுதலுக்கு பணமும் கட்டப்பட்டு விடுகிறது. ஆனால், பல நேரங்களில் பட்டா கிடைப்பதில்லை.

இந்த நிலையில், பத்திரப் பதிவு செய்யப்பட்ட சொத்து எந்த தாலுகா எல்லைக்கு உட்பட்டது, என்பதை அறிந்து, அந்தப் பகுதி தாலுகா அலுவலகத்தில் பட்டா மாற்றத்துக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டி இருக்கிறது. அதற்கான விண்ணப்பங்கள் மட்டுமே இணையதளத்தில் கிடைக்கின்றன.



Source link

Leave a Reply

Your email address will not be published.