ஆண்டுதோறும் ஜனவரி 25-ஆம் தேதி இந்தியாவின் தேசிய சுற்றுலா தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி உலக அளவில் சுற்றுலா மூலம் அதிக வருமானத்தைப் பெறும் நாடுகள் குறித்த புள்ளிவிவரங்களைப் பார்ப்போம்.

1. அதிக வருமானம் ஈட்டும் நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. உலகெங்கும் இருந்து சுற்றுலாப் பயணிகள் அதிகம் குவியும் இடமாக அமெரிக்கா உள்ளது. குறிப்பாக, பொழுதுபோக்கிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இது அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1.1% மட்டுமே.
2. உலக அளவில் சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் இடத்தில் ஸ்பெயின் இரண்டாவது இடத்தில் உள்ளது. கடந்த 2010-லிருந்து ஸ்பெயினுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 100 மில்லியனுக்கும் அதிகமாகியுள்ளது. இது அந்நாட்டின் மக்கள் தொகையைவிட 2.5 மடங்கு அதிகமானது. இதனால் 70 பில்லியன் யூரோ நாட்டுக்கு வருமானமாக கிடைக்கிறது. இது அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.2% ஆகும்.