Tamil Entrepreneurs

ஹோட்டலில் யானையால் எழுந்த பெண் – வைரலாகும் வீடியோ!


விலங்குகளின் அட்டகாசங்கள் பற்றிய பதிவுகள் பெருகி வரும் நிலையில் தற்போது தாய்லாந்தில் உள்ள தனது ஹோட்டல் அறையில் தூங்கிக் கொண்டிருந்த ஒரு பெண் யானையால் எழுந்த அழகான தருணத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

ஹோட்டல் ரூம்களில் நாம் எழுவது என்பது பொதுவாக அந்த ஹோட்டல் ஊழியர்கள் காலை வணக்கம் அழைப்பு கூறுவதாலோ அல்லது அலாரம் மூலமோ நமது காலை நேரம் விடியும், ஆனால் யானையால் எழுந்திருப்பதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தற்போது இந்த வீடியோவை பிரபல வாழ்க்கை முறை மற்றும் பயண பதிவர் சாக்‌ஷி ஜெயின் (Sakshi Jain) பகிர்ந்துள்ளார்.இது மிகவும் அழகான மற்றும் வியப்புக்குள்ளாக்கும் பதிவாக அமைந்தூள்ளது.

இந்த வீடியோவில், தாய்லாந்தில் உள்ள ஒரு ரெசார்ட்டில் விடுமுறைக்காக சென்ற சாக்‌ஷி, தனது ஹோட்டல் படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்த போது, ​​ ஜன்னல் வழியாக வந்த யானை ஒன்று தனது அறைக்குள் எட்டிப்பார்த்து, அதன் தும்பிக்கையால் மெதுவாக அவளைக் கவ்வியது. சாக்‌ஷி எழுந்து தன் அறையின் ஜன்னலுக்கு வெளியே எட்டிப்பார்த்தபோது யானையின் தும்பிக்கையைப் பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்தால் என்பது அந்த வீடியோவில் தெரிகிறது.

ALSO READ | கார்கில் வெற்றி தினம்.. சியாச்சின் பள்ளத்தாக்கு போரின் நினைவுகள்..

தாய்லாந்தின் சியாங் மாய் ( Chiang Mai) ல் அமைந்துள்ள இந்த ரெசார்ட்டில் வரவேற்பு அழைப்பு அல்லது அலாரங்களுக்குப் பதிலாக யானைகள் உங்களை எழுப்புகின்றன. மேலும் இதன் சிறப்பாக, நீங்கள் யானைகளுடன் நடக்கவும், உணவளிக்கவும், குளிக்கவும் மற்றும் விளையாடவும் முடியும். இது மிகவும் புதுவிதமான அனுபவமாக இருந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த அனுபவம் வித்தியாசமாக இருப்பதால், அடுத்த முறை சுற்றுலாக்காக தாய்லாந்தைத் திட்டமிடும் போது, ​​மலைகள், ஆறுகள் மற்றும் யானைகளால் சூழப்பட்ட சியாங்மாய் நகரத்தை உங்கள் பயணத்தில் சேர்க்க மறக்காதீர்கள்” என்றும் சாக்‌ஷி அந்த வீடியோ பதிவில் கூறியுள்ளார்.

 

 

 

சமீபத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ 23 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை 70 மில்லியன் பார்வையாளர்களை நெருங்கியுள்ளது. மேலும் இன்ஸ்டாவில் இந்த வீடியோ 53 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளதோடு, 2,20,000 லைக்குகளையும் பெற்று நெட்டிசன்களின் இதயங்களில் இடம் பிடித்துள்ளது. 3000க்கும் மேற்பட்ட கருத்துகளை பெற்றுள்ளதோடு இணையத்தில் விலங்குகளின் க்யூட் வீடியோவாகவும் அமைந்துள்ளது.

ALSO READ | ஜப்பான், சீன உணவின் இன்றியமையாத டோஃபு தினம் இன்று …!

இது தற்போது விலங்குகள் மேல் ஏற்படும் பயத்தை நம்மிடமிருந்து போக்கும் முயற்சியாக அமைந்துள்ளது என்றும் கூறலாம். நாய், பூனை என்று நம் வீடுகளில் வளர்க்கும் விலங்குகளை போலவே இந்த விலங்குகளும் அமைந்துள்ளது.அந்த வகையில் ஹோட்டல் அறையில் தூங்கும் பெண் ஒருவரை யானை ஒன்று தன் தும்பிக்கையால் எழுப்பி விடும் காட்சி இணையவாசிகளை சிரிக்க வைத்துள்ளது என்றே சொல்லலாம்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.





Source link

Leave a Reply

Your email address will not be published.