Tamil Entrepreneurs

10 வினாடிகளில் காணாமல் போன கோழி குஞ்சை கண்டுபிடிக்க முடிந்தால் நீங்க கில்லாடி தான்!


சமீப காலங்களில் பலரை கவரும் விதமான ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன, இது நெட்டிசன்களின் மூளைக்கு வேலை தரக்கூடிய ஒன்றாக இருந்து வருகிறது. ஒரு படப் புதிராக இருந்தாலும் சரி, அல்லது ஒரு ஓவியத்திற்குள் மறைந்திருக்கும் ஏதாவது ஒன்றை கண்டுபிடிக்கும் வகையிலான புதிராக இருந்தாலும் சரி, ஆப்டிகல் இல்யூஷன் புதிர்களை எப்போதும் தீர்க்க வேடிக்கையாக இருக்கும். ஆப்டிகல் இல்யூஷன் நோக்கம், உங்களுக்கு முன் வழங்கப்பட்டுள்ள படத்தைப் பற்றிய உங்கள் உணர்வைச் சோதிப்பதும், உங்கள் கண்காணிப்புத் திறனைச் சோதிப்பதும் ஆகும். இப்படி ஏராளமான புதிர்கள் இணையத்தில் உள்ளன. அவற்றில் ஒன்றை தான் இன்று நாம் பார்க்க போகிறோம்.

இன்றைய புதிரில் ஒரு பண்ணையின் புகைப்படத்தை உங்களுக்கு கொடுத்துள்ளோம். இது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிற புதிராகும். இந்த படத்தில் தாய் கோழியிடமிருந்து பிரிந்த ஒரு குட்டிக் கோழி குஞ்சைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதே இன்றைய சவால். இந்த புதிர் நீண்ட காலமாக நாம் சந்திக்கும் மிகவும் கடினமான ஒன்றாகும். ஏனெனில் காணாமல் போன குஞ்சுகளை குறிப்பிட்ட நேரத்தில் ஒரு சதவீத மக்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும் என்று கூறப்படுகிறது.

இந்த புதிர் படத்தில் ஒரு கொட்டகைக்கு வெளியே பண்ணை விலங்குகள் கூட்டமாக இருப்பதை காட்டுகிறது. இதில் ஒரு வாத்து தன் குட்டி வாத்துகளுடன் இருக்கிறது. அதே போன்று, ஒரு மாடு தன் கன்றுக்குட்டியுடன், இரண்டு குதிரைகள், செம்மறி ஆடுகள், ஒரு பன்றி தன் அழகான குட்டி பன்றிக்குட்டிகளுடன், ஒரு நாய் தன் நாய்க்குட்டியுடனும் இருக்கிறது. இருப்பினும், இந்த தாய் கோழி இந்த பெரிய பண்ணையில் எங்கோ தனது கோழிகுஞ்சை தொலைத்து விட்டதாக தெரிகிறது. இப்படத்தில், தாய் கோழி தனது கோழிகுஞ்சை காணவில்லை என்பதால் சோகமாக இருக்கிறது. காணாமல் போன கோழிகுஞ்சைக் கண்டுபிடிக்க தாய் கோழிக்கு உங்களால் உதவ முடியுமா என்று பாருங்கள்.

இந்த ஒளியியல் மாயை புதிரை 10 வினாடிகளுக்குள் உங்களால் தீர்க்க முடிகிறதா என்று பாருங்கள். ஒரு வேலை உங்களால் கண்டிபிடிக்க முடியவில்லை என்றால், நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம். மேலே உள்ள ஆப்டிகல் மாயை படத்தை உற்றுப் பார்த்து முயற்சி செய்யுங்கள். படத்தை எவ்வளவோ உற்றுப் பார்த்தும், குறிப்பிட்ட கால அளவுக்குள் காணாமல் போன கோழி குஞ்சை கண்டுபிடிக்க முடியவில்லையா? கவலை வேண்டாம், எளிதாக கண்டுபிடிக்க நாங்கள் வழி சொல்கிறோம்.

Also Read : இந்த படத்தில் மறைந்திருக்கும் பூனையை 13 வினாடிகளில் உங்களால் கண்டுபிடிக்க முடியுமா.?

ஆப்டிகல் இல்யூஷன் தீர்வு இதோ:

காணாமல் போன கோழிகுஞ்சை கண்டுபிடிக்க கொட்டில் உள்ளே அமர்ந்திருக்கும் நாயின் அருகில் உற்று பாருங்கள். இதில் அந்த நாயின் இடதுபுறத்தை ஜூம் செய்து பாருங்கள். ஆம், அங்கே தான் கோழி குஞ்சு உள்ளது. அந்த கோழி குஞ்சும் நாயும் ஒரே நிறத்தில் இருப்பதால் முதலில் கண்டுபிடிக்க சவாலாக இருந்திருக்கும்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.



Source link

Leave a Reply

Your email address will not be published.