Tamil Entrepreneurs

‘2047-ல் பதஞ்சலியின் புகழ் பொன் எழுத்துகளால் பொறிக்கப்படும்’ – பாபா ராம்தேவின் அடுத்த திட்டம் | 4 patanjali companies plans for ipo says Baba Ramdev


இந்நிலையில் அடுத்த 5 ஆண்டுகளில் பதஞ்சலியின் பிற 4 நிறுவனங்களையும் ஒன்றன் பின் ஒன்றாக பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் என பாபா ராம்தேவ் கூறியிருக்கிறார். இந்த நிறுவனங்கள் சார்பில் பொதுப் பங்குகளை வெளியிட்டு விற்பனை செய்து நிதி திரட்ட திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

தற்போது பதஞ்சலி குழுமத்தின் ஆண்டு விற்பனை ரூ.40 ஆயிரம் கோடியாக இருக்கிறது. அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.1 லட்சம் கோடி திரட்ட திட்டமிட்டுள்ளதாகவும், மொத்தமாக பதஞ்சலி குழுமத்தின் சந்தை மதிப்பை ரூ.5 லட்சம் கோடியாக உயர்த்தவும் இலக்கு வைத்துள்ளதாக கூறினார்.

பதஞ்சலி வெல்னெஸ்

பதஞ்சலி வெல்னெஸ்

மேலும் பதஞ்சலி வெல்னெஸ் நிறுவனத்தின் கீழ் 1000 IPD, OPD மையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும், இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் பதஞ்சலி மையங்களைத் தொடங்கிவிருப்பதாகவும் கூறியவர், அலோபதி மருத்துவத்துக்கு மாற்றாக இந்தியாவின் பாரம்பரிய மருத்துவத்தை முன்னிறுத்த அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டுவருவதாகவும் கூறினார்.

2047-ல் இந்தியா தனது நூற்றாண்டு சுதந்திர தின விழாவைக் கொண்டாடும்போது, நாட்டின் வளர்ச்சியில் பதஞ்சலி அளித்த பங்களிப்பு பொன் எழுத்துகளால் பொறிக்க தீர்மானம் மேற்கொண்டுள்ளோம்.

சுதேசி தன்மையை ஊக்குவித்து நாட்டை தன்னிறைவு அடையச் செய்யும் செயல்களில் பதஞ்சலி தொடர்ந்து தன்னை ஈடுபடுத்தி உள்ளது என்று கூறியுள்ளார்.



Source link

Leave a Reply

Your email address will not be published.