Tamil Entrepreneurs

7,80,0000 ஆண்டுகளுக்கு முன்பே உணவை சமைத்து சாப்பிட்ட மனிதர்கள்


தொல்லியல் ஆராய்ச்சி இன்றைக்கு மனிதர்களின் நாகரித்தையும், பண்டைய காலத்தில் வாழ்ந்த சுவாரஸ்சிய மற்றும் வியப்பில் ஆழ்த்தக்கூடிய பல விஷயங்களை நம் கண்முன்னே கொண்டு வருகிறது. முன்பை விட சமீப காலங்களாக எங்கு பார்த்தாலும் பல்லாயிரக்கணக்கான வரலாற்று இடங்களை மட்டுமில்லாமல், மக்கள் வாழ்ந்ததாகக் கூறப்படும் பல இடங்களில் அகழாய்வுகள் நடைபெற்று வருகிறது.

இவற்றில் மூலம் கிடைக்கும் விஷயங்கள் அனைத்தும் வியத்தகு அளவில் உள்ளது தான் இதை மேலும் சிறப்பாக்குகிறது. இப்படியொரு ஆய்வின் மூலம் வெளியான தகவல் தான் மனிதர்கள் நூறாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே பரிமாண வளர்ச்சியைப் பெற்றுள்ளனர் என்பதை உரக்கச் சொல்கிறது. எங்கே? ஆய்வின் வெளியான தகவல்கள் என்ன? என்பது குறித்து இங்கே விரிவாக அறிந்துக் கொள்வோம்.

சமைப்பதில் மனிதர்களின் பரிமாண வளர்ச்சியைக் கண்டறித்த ஆய்வுகள்…

மனிதன் ஆதிகாலத்தில் தனக்குத் தேவையான காய்கறிகள் மற்றும் மாமிசங்களைக்கூட பச்சையாகத் தான் சாப்பிட்டார்கள் என்று நாம் அறிந்திருப்போம். இதை தொடர்ந்து கற்களை உரசி அதன் மூலம் பெறக்கூடிய நெருப்பினால் தங்களுக்கான உணவுகளைச் சுட்டு சாப்பிட்டார்கள் என்றெல்லாம் வரலாற்று ஆய்வுகள் நமக்கு கூறுகிறது. பொதுவாக இந்த உலகில் மனிதர்கள் மட்டுமே உணவைச் சமைக்க தெரிந்த ஒரே இனம் என்று கூறப்பட்டாலும் எப்போது இவர்கள் முதலில் சமைக்கத் தொடங்கினார்கள் என்பதற்கான சான்றுகள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. இருந்தப் போதும் வரலாற்று ஆராய்வுகளின் கூற்றுப்படி, கி.மு 1,70,000க்கு முன்பு தான் மனிதர்கள் சமைத்தார்கள் என்பதற்கான சான்றுகள் கிடைக்கப்பெற்றது.

இந்நிலையில் தான், இதற்கெல்லாம் முன்னதாகவே மனிதர்கள் உணவை சமைத்துச் சாப்பிட்டார்கள் என்று ஆதாரங்களுடன் இஸ்ரேல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பல பல்கலைக்கழங்களை சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குழு, சமீபத்தில் இஸ்ரேலில் தொல்பொருள் தளத்தைக் கண்டுபிடித்தது. இது உணவு சமைப்பதற்கு முதன் முதலில் நெருப்பைப் பயன்படுத்துவதை ஆவணப்படுத்தியது தெரியவந்துள்ளது.

இதையும் வாசிக்க : பூனை படியில் ஏறுகிறதா.? இறங்குகிறதா.? பல ஆண்டுகளாக மூளைக்கு சவால் விடும் வைரல் புகைப்படம்.!

டெல் அவிவ் பல்கலைக்கழகத்தின் டாக்டர் இரிட் சோஹேர் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வின் போது, நன்னீர் பகுதியில் கொண்டை மீன் போன்ற மீன் எச்சங்களைக் கண்டறிந்து ஆய்வு நடத்தினர். ஆராய்ச்சியாளர்கள் மீன்களுடைய பற்களின் ஈறுகளில் இருந்து படிகக் கற்களை ஆய்வு செய்த போது, அந்த மீன்கள் சுட்டு சாப்பிடப்படவில்லை என்றும், குறைந்த அளவிலான வெப்பநிலையில் சமைக்கப்பட்டது என கண்டறியப்பட்டது. ஆனால் எப்படி சமைத்தார்கள் என்று தெரியவில்லை, ஆனாலும் உணவை சுட்டுச்சாப்பிடவில்லை என்பது மட்டும் தெளிவாகியுள்ளது.

ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்த தகவலின் படி, சுமார் 7,80,0000 ஆண்டுகளுக்கு முன்பே உணவை மனிதர்கள் சமைத்துச் சாப்பிட்டார்கள் என்று தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வின் படி, உணவைச் சமைக்க தேவையான திறனை பெறுவது குறிப்பிடத்தக்க பரிணாம முன்னேற்றத்தை குறிக்கிறது. ஏனெனில் இது கிடைக்கக்கூடிய உணவு வளங்களை தகுந்த முறையில் பயன்படுத்துவதற்கான கூடுதல் வழியை வழங்கியது என்று அகழ்வராய்ச்சியின் இயக்குரான ஜெருசலேமின் ஹீப்ரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் நாமா கோரான் இன்பார் கூறியுள்ளார்.

முன்னதாக ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஆய்வின் போது, கி.மு 1,70,000 ஆண்டுகளுக்கு முன்பு தான் மனிதர்கள் சமைத்தார்கள் என்பதற்கான சான்றுகள் கிடைக்கப்பெற்றது ஆனால் தற்போது கிடைத்துள்ள ஆய்வுகளின் படி, சுமார் 6,00,000 ஆண்டுகளுக்கு முன்னதாகவே மனிதர்கள் நாகரிக வளர்ச்சியுடன் வாழ்ந்துள்ளார் என்பது நிரூபணமாகியுள்ளது. குறிப்பாக ஆரம்ப கால மனிதர்கள், நன்னீர் குடியேற்றங்களில் வாழ்ந்து, தங்கள் உணவை சமைக்கக் கற்றுக்கொண்டவர்கள் என்றும் நாம் முன்பு புரிந்துக்கொண்டதை விட மிகவும் முன்னேறியவர்கள் என்றும் ஆராய்ச்சிகள் கூறுகின்றனர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.Source link

Leave a Reply

Your email address will not be published.