அவர் குறிப்பிட்டுள்ளது போல மியூச்சுவல் ஃபண்டு சந்தை, குறிப்பிடத்தகுந்த வளர்ச்சியை குறுகிய காலத்தில் எட்டியுள்ளது. மக்களின் முதலீட்டு அணுகுமுறை மாறி வருவதை இது தெளிவாக காட்டுகிறது. இந்தியர்களிடையே சேமிக்கும் பழக்கம் எப்போதும் அதிகமாக உள்ளது.
ஃபிக்ஸட் டெபாசிட், தங்கம் என்று தமது தாத்தா காலத்தில் சேமித்து வந்த நம் மக்கள், ஆரம்ப காலத்தில் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு தயக்கம் காட்டினர்.

ஆனால் பங்கு சந்தைகளில் கிடைக்கும் லாபம் மற்றும் வங்கி டெபாசிட்களில் கிடைக்கும் குறைந்த வட்டி போன்ற காரணங்களால் மக்களின் முதலீட்டு முறை மாறி வருகிறது.