Tamil Entrepreneurs

80 விமானிகளுக்கு சம்பளமின்றி விடுப்பு… `ஷாக்’ கொடுத்த ஸ்பைஸ் ஜெட்- என்ன காரணம்?| SpiceJet Puts 80 Pilots on Leave Without Pay


ஹரியானாவை தலைமையிடமாகக் கொண்ட ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம், செலவைக் குறைக்கும் நோக்கத்தில், 80 விமானிகளுக்கு 3 மாதகாலம் சம்பளம் இல்லாத விடுப்பு அளித்துள்ளது. தங்களின் இந்த நடவடிக்கை, தற்காலிகமானது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

யாரையும் வேலையை விட்டு அனுப்பவில்லை என்று அந்நிறுவனம் விளக்கம் அளித்திருந்த போதிலும், மீண்டும் அவர்கள் பணிக்கு எடுத்துக்கொள்ளப்படுவது குறித்து மிக உறுதியான எந்த அறிவிப்பும் இல்லை என்ற சர்ச்சையும் சுழல்கிறது. கடந்த ஜூன் வரையான காலாண்டில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு 784 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதை அடுத்து அந்நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

இது தொடர்பாக அந்நிறுவனம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,“கோவிட் தொற்றுநோயின் உச்சகட்டத்தின் போது கூட எந்தவோர் ஊழியரையும் பணிநீக்கம் செய்யக்கூடாது என்று ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் கொள்கை கொண்டிருந்தது. அதே கொள்கையில் இப்போதும் உறுதியோடு உள்ளோம். நிறுவனத்தின் செலவுகளை ஒழுங்குபடுத்தும் வகையில், நிர்வாகக் காரணங்களுக்காக தற்காலிகமாக 80 விமானிகளுக்கு 3 மாதங்கள் ஊதியமில்லாத கட்டாய விடுப்பு அளிக்கப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது. நீக்கப்பட்ட விமானிகள், போயிங் மற்றும் பாம்பார்டியர் கடற்படையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Reply

Your email address will not be published.