Tamil Entrepreneurs

A young man suffering from stomach pain – the doctors were shocked | வயிற்று வலியால் துடித்த இளைஞர்


வயிற்று வலியுடன் நோயாளி ஒருவர் வருகிறார் என்றால் அல்சர், கேஸ்ட்ரிக் என ஏதோ ஒரு வயிறு சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவராக அவர் இருக்கலாம். 100க்கு 99 சதவீத நோயாளிகள் இதுபோன்ற வழக்கமான பிரச்சனையுடன் வருபவர்கள் தான்.

ஆனால், அரிதிலும், அரிதாக நம்ப முடியாத சில காரணங்களாலும் சிலருக்கு வயிற்று வலி ஏற்படுகிறது. அண்மையில் மேற்கு வங்க மாநிலத்தின் தெற்கு பரகானாஸ் மாவட்டத்தில் நடைபெற்ற அறுவை சிகிச்சையும் கூட இதுபோன்ற விநோதமான காரணத்திற்காக நடைபெற்றுள்ளது.

இங்குள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அண்மையில் 27 வயதான நபர் வயிற்று வலியுடன் வந்தார். உடனடியாக அவரை உள்நோயாளிகள் பிரிவில் அனுமதித்த மருத்துவர்கள், அவருக்கான பரிசோதனை மற்றும் சிகிச்சைகளை மேற்கொள்ள தொடங்கினர்.

எக்ஸ்-ரே சோதனையில் காத்திருந்த அதிர்ச்சி

தொடர்புடைய நோயாளிக்கு எக்ஸ் ரே எடுத்துப் பார்த்தலில், அவரது வயிற்றில் முழு பாட்டில் ஒன்று சிக்கியிருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, மருத்துவர்கள் குழுவினர் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து அதனை அகற்றினர். சுமார் ஏழரை இன்ச் நீளம் கொண்ட அது ஒரு செண்ட் பாட்டில் ஆகும்.

இளைஞரின் உணவுக் குழாய் பகுதி மற்றும் சிறுகுடல் போன்றவற்றையும் இது வெகுவாக பாதித்திருந்தது. அந்தப் பகுதிகளுக்கும் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். எனினும், மிகவும் மோசமடைந்துள்ள சிறுகுடல் பகுதிக்கு சில நாட்களுக்குப் பிறகு மற்றொரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பாட்டில் உள்ளே சென்றது எப்படி?

மருத்துவர் அரவிந்தன் கோஷ் இதுகுறித்து கூறுகையில், “நோயாளியின் வயிற்றுப் பகுதிக்குள் இந்த செண்ட் பாட்டில் எப்படி சென்றது என்பது தெரியவில்லை. ஆனால், 20 நாட்களாகவே அவர் வயிற்று வலியால் அவதியடைந்து வந்துள்ளார்.

கடந்த வாரம் இயற்கை உபாதைகளைக் கூட அவரால் கழிக்க முடியவில்லை. வலி தாங்க முடியாத நிலையில், அவர் இங்கு சிகிச்சைக்கு வந்தார். அரிதிலும், அரிதாக இருந்த இந்த பாதிப்பிற்கு மிகுந்த கவனத்துடன் சிகிச்சை அளித்தோம்’’ என்று தெரிவித்தார்.

நோயாளிகளுக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டது குறித்து அவரது குடும்பத்தினர் நிம்மதியை வெளிப்படுத்தினர். பொதுவாக அரசு மருத்துவனை என்றாலே சிகிச்சை தாமதமாகும் என்று தாங்கள் நினைத்திருந்ததாகவும், ஆனால், இங்குள்ள மருத்துவர்கள் துரிதமாக செயல்பட்டு சிகிச்சை அளித்தனர் என்றும் நோயாளியின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Read More: கிஃபட் பாக்ஸை திறந்து பார்த்த சிறுவனுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி.. ஆனந்த கண்ணீரில் மூழ்கிய தருணம்

வயிற்றில் கிளாஸ் துண்டுகள் :

அண்மையில் ஒடிஸா மாநிலத்தில் வயிற்று வலியால் துடித்த நபருக்கும் விநோதமான காரணம் கண்டறியப்பட்டது. கூலித் தொழிலாளியான அந்த நபரின் வயிற்றில் இருந்து கிளாஸ் துண்டுகள் அறுவை சிகிச்சை மூலமாக அகற்றப்பட்டன. மது அருந்தும் பழக்கம் உடைய இந்த நபர், தவறுதலாக உடைந்த பாட்டிலில் உள்ள மதுவை அருந்தியதன் மூலமாக கிளாஸ் துண்டுகள் வயிற்றுக்குள் சென்றிருக்கலாம் என்று கண்டறியப்பட்டது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.



Source link

Leave a Reply

Your email address will not be published.