Health

Actor Ajith Blockbuster Movies In Tamil Cinema | பாக்ஸ் ஆபிஸை அலறவிட்டு சாதனை படைத்த அஜித்

தமிழ் திரையுலகின் அசைக்கமுடியாத ரசிகர்கள் பட்டாளத்தை தன்னகத்தே கொண்டு முன்னணி நட்சத்திரமாக ஜொலித்துக்கொண்டிருக்கும் நடிகர் அஜித்குமார், இன்று அவரது 51வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.  அஜித்தை விட அவரது ரசிகர்கள் தான் இவர் பிறந்தநாளை வெகுவிமரிசையாக கொண்டாடி வருகின்றனர், நேற்றைய தினத்திலிருந்தே பலரும் அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறி வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களில் ரயில் ஒட்டி வருகின்றனர்.  எந்த பின்புலமும் இல்லாமல் திரைத்துறையில் வெற்றிவாகை சூட்டியுள்ள இவரை பல ரசிகர்களும் தங்களுக்கு இன்ஸ்பிரேஷனாக கருதி வருகின்றனர்.  அவரது பிறந்தநாள் தினமான இந்த சிறப்பு நாளில் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அவரது சில சிறப்புகள் பற்றி இங்கே காண்போம்.

ajith

மேலும் படிக்க | AK51 அன்று வருகிறது AK61 அப்டேட்?

சரண் இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த 1999ம் ஆண்டு வெளியான படம் ‘அமர்க்களம்’.  இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஷாலினி நடித்திருந்தார், இதில் அஜித் ஆதரவற்ற அனாதையாக நடித்திருந்தார்.  இந்த படத்திலிருந்து தான் அஜித் மற்றும் ஷாலினிக்கு இடையே பட்டாம்பூச்சி பறக்க ஆரம்பித்தது, படத்திலும் இவர்களது கெமிஸ்ட்ரி பலராலும் ரசிக்கப்பட்டது.  ஆக்ஷன் கலந்து உருவான இந்த காதல் திரைப்படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட்டடித்தது.  அடுத்ததாக அஜித்தின் தரத்தை ஏணி வைத்தாலும் எட்டமுடியாத அளவிற்கு உயர்த்தியது ‘பில்லா’ படம் தான். ரஜினி நடித்த பில்லா படத்தை ரீமேக் செய்து இவர் நடித்திருந்தார்.  விஷ்ணுவர்தன் இயக்கத்தில் 2007ம் ஆண்டு வெளியான இந்த அதிரடி கேங்ஸ்டர் திரைப்படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார்.  15 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இந்த படம் 5 மடங்கு அதிகமான வசூலை தனது பிளாக்பஸ்டர் ஹிட்டடித்தது.

அதனைத்தொடர்ந்து அஜித்தின் 50-வது படமாக அமைந்தது ‘மங்காத்தா’, இவரின் 50-வது படமென்பதால் ரசிகர்கள் பலரும் உற்சாகமாக படத்தை காண காத்திருந்தனர்.  வெங்கட் பிரபு இயக்கத்தில் 2011ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் அஜித் நெகட்டிவ் கேரக்டரில் நடித்து அனைவரையும் ரசிக்க வைத்தார்.  இந்த படம் திரையரங்குகளில் 100 நாட்களுக்கும் மேலாக ஓடி வசூல் சாதனை படைத்து பிளாக்பஸ்டர் ஹிட்டடித்தது.  அடுத்ததாக சிவா இயக்கத்தில், அஜித் நடிப்பில் 2019ம் ஆண்டு வெளியான குடும்ப திரைப்படம் ‘விஸ்வாசம்’.  ஆக்ஷன், குடும்ப பாசம், பிரிந்த மனைவியையும், மகளையும் சேர்வதற்காக இவர் நடத்தும் பாசப்போராட்டம் என படம் நல்ல வரவேற்பை பெற்றது.  இந்த படம் தமிழகத்தில் கிட்டத்தட்ட 130 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை கொடுத்ததோடு, பாக்ஸ் ஆபிசில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

மேலும் ஹெச்.வினோத் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான ‘வலிமை‘ படம் வெளியாவதற்கு முன்னர் இருந்தே பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது.  பாசம், ஆக்ஷன், த்ரில், சமூக கருத்து போன்ற பல கலவையாக உருவான இந்த படம் அனைத்து திரையரங்கிலும், அனைத்து காட்சிகளும் ஹவுஸ் புல்லாக ஓடியது.  படம் வெளியான முதல் தினமே அதிக வசூலை இப்படம் பெற்றது, மேலும் இப்படம் இறுதியாக உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் சாதனை புரிந்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

Valimai

மேலும் படிக்க | விக்னேஷ் சிவனை சைக்கோ என்று திட்டிய நயன்தாரா!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Source link

Leave a Reply

Your email address will not be published.