Health

Actress Andrea Nude Scenes Removed From Pisasu 2 Movie Mysskin | பிசாசு 2 படத்தில் ஆண்ட்ரியா நடித்த நிர்வாண காட்சிகள் நீக்கம்

மிஷ்கின் இயக்கத்தில் 2014ம் ஆண்டு வெளியான பிசாசு படத்தின் தொடர்ச்சியாக உருவாகுகிறது பிசாசு-2.  பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தில் ஆண்ட்ரியா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், மேலும் இந்த படத்தில் சைக்கோ படத்தின் மூலம் பிரபலமான ராஜ்குமார் பிச்சுமணி, பூர்ணா சந்தோஷ் பிரதாப், அஜ்மல் அமீர் போன்ற நடிகர்கள் நடிக்கின்றனர்.  அதோடு இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் விஜய் சேதுபதி நடித்து உள்ளார், இவர் இப்படத்தில் மருத்துவராக நடிப்பதாக கூறப்படுகிறது.  ராக்ஃபோர்ட் எண்டெர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைக்கிறார்.  தமிழ் மொழியில் உருவாகியுள்ள இந்த படம் தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் ஆகஸ்ட-31ம் தேதி வெளியாகவுள்ளது.

மேலும் படிக்க | வாரிசு பொங்கல் ரிலீஸ் இல்லையா? வெளியான அதிர்ச்சி தகவல்!

ஆண்ட்ரியா இடம்பெற்றிருக்கும் இப்படத்தின் போஸ்டர்கள் சில வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாத் டப்பில் கையில் சிகரெட்டுடன் இருப்பது போன்ற படத்தின் போஸ்டர்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது.  இந்த படத்தில் ஆண்ட்ரியா நிர்வாணமாக நடித்திருக்கும் செய்தி பரபரப்பாக பேசப்பட்டு வந்தது, இதுகுறித்து பேசிய ஆண்ட்ரியா, இந்த படத்தில் 15 நிமிடங்கள் நிர்வாணமாக நடிக்க வேண்டுமென்று இயக்குனர் என்னிடம் கேட்டபொழுது நான் ஆரம்பத்தில் ஒத்துக்கொள்ளவில்லை, பின்னர் படத்தின் தரம் உணர்ந்து நிர்வாணமாக நான் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்று தைரியமாக கூறினார்.  ஆனால் தற்போது ஆண்ட்ரியாவின் இந்த காட்சியை படக்குழு நீக்கியுள்ளது, ஏனெனில் படத்தை பெரியவர்கள் மட்டுமல்லாது குழந்தைகளும் பார்ப்பார்கள் அப்படி இருக்கும்பொழுது இதுபோன்ற காட்சிகளை குடும்பத்தினருடன் சேர்ந்து பார்ப்பது முகச்சுளிப்பை ஏற்படுத்தும் என்பதால் அந்த காட்சிகளை படக்குழு நீக்கியுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

அரண்மனை-1 மற்றும் அரண்மனை-3 போன்ற பேய் படங்களை தொடர்ந்து ஆண்ட்ரியா பிசாசு-2 படத்தில் நடித்திருக்கிறார்.  பாடகியும், நடிகையுமான ஆண்ட்ரியா கைவசம் எட்டு படங்கள் உள்ளது, இவர் தற்போது ‘பிசாசு-2’ மற்றும் ‘கா-தி ஃபாரஸ்ட்’ போன்ற படங்களின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார்.

மேலும் படிக்க | இந்த வாரம் இவ்வளவு படங்கள் ரிலீசா? ஆச்சர்யத்தில் திரையுலகம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Source link

Leave a Reply

Your email address will not be published.