Tamil News

Addiction Of Drug Is Not Crime: Its Disease: TN Minister Anbil Mahesh | போதைப் பொருள் பழக்கத்திலிருந்து மீண்டு வர கவுன்சிலிங் செல்ல வலியுறுத்தும் அமைச்சர்


சென்னை:  “போதை இல்லா பாதை” என்கிற இயக்கம் சார்பில் வருகின்ற அக்டோபர் 2ஆம் தேதி  முதல் தமிழகம் முழுவதும் போதை ஒழிப்புக்கான விழிப்புணர்வு பயணம் நடைபெற இருக்கிறது. இதற்கான பதாகை (போஸ்டர்) வெளியீட்டு நிகழ்வு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று நடைபெற்றது. இதில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டு பதாகைகளை வெளியிட்டார். நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட அமைச்சர், அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், தமிழ்நாடு தழுவிய ஒரு பிரச்சாரத்தை இன்றைக்கு சமூகத்தில் இருக்கின்ற நல்ல உள்ளங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து பதாகை வெளியிடுகின்ற நிகழ்வில் அழைத்ததற்கு நன்றியை தெரிவித்தார்.

போதையில்லா தமிழகத்தை உருவாக்க தமிழக முதல்வர் எடுக்கின்ற முயற்சிக்கு இது போன்ற இயக்கங்கள் நடத்துகின்ற விழிப்புணர்வு முதல்வருக்கு உறுதுணையாக இருக்கும் என்றும், முதல்வர் எடுக்கின்ற ஒவ்வொரு முயற்சிக்கும் இது போன்ற இயக்கங்கள் துணையாக இருக்க வேண்டும் வேண்டுகோள் விடுத்தார்.

அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி பிறந்த நாள் அன்று, இந்த விழிப்புணர்வு பிராச்சாரம் தொடங்குகிறது என கூறிய அவர், போதை பழக்கம் என்பது ஒரு குற்றம் அல்ல இது ஒரு நோய் இதை சரி செய்ய வேண்டியது சமூகத்தில் இருக்கின்ற ஒவ்வொருவருடைய கடமை என்றும் போதை பழக்கத்தில் ஈடுபடுவோர் ஆளாளுக்கு ஒரு காரணத்தை சொல்லி, இதற்காக தான் நான் போதை பழக்கத்திற்கு அடி அடிமையானதாக ஒரு காரணத்தை சொல்வதாக தெரிவித்தார்.

ஆனால், இதனால் வருகின்ற பிரச்சனைகள் அவர்களுக்கு தெரிவதில்லை என்று கூறிய அமைச்சர் அன்பில் மகேஷ், தங்களை சுற்றி உள்ளவர்கள் சொல்வதற்காக ஆர்வத்தில் ஒரு முறை போதைப்பொருட்களை பயன்படுத்திய பிறகு,  நாளடைவில் போதைப்பொருள் இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலைமைக்கு அவர்கள் தளப்படுவதகவும் கூறினார்.

மேலும் படிக்க | காவல்துறை விசாரணையில் உயிரிழந்த தங்கப்பாண்டி மரணத்திற்கு நீதி வேண்டும்: சீமான்

மேலும் பேசிய அமைச்சர், போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க மருத்துவர்கள் உள்ளதாகவும், இவர்கள் மருத்துவமனையை தேடி சென்றால் யாரேனும் பார்த்து விட்டால் அவர்கள் அசிங்கப்படுத்தி விடுவார்கள் என்று நினைக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டார். அதைக் காட்டிலும் அவமானமான விஷயம் நீங்கள் போதைக்கு அடிமையாகி இருப்பது தான் என்றும், போதைப் பழக்கத்தில் இருந்து விடுபட நீங்கள் கவுன்சிலிங் செல்வதை பார்த்து சமூகத்தில் இருக்கும் இது போன்றவர்களுக்கு தைரியம் ஏற்பட்டு அவர்களும் போதைப் பழக்கத்திலிருந்து விடுபட மருத்துவர்களை அணுகி இதை சரி செய்து கொள்ளலாம் என்று நினைப்பு வரும் என்று கூறினார்.

கடந்த பத்து வருடமாக அதிமுக என்ன செய்தது என்பது அவசியம் இல்லை என்று கூறிய அமைச்சர், இனி திமுக ஆட்சி காலத்தில் இது போன்ற எதுவும் இருக்க கூடாது என்று முதல்வர் பல்வேறு விஷயங்களை செயல்படுத்தி வருவதாகவும் கூறினார்.

ஸ்கூல் மேனேஜ்மென்ட் கமிட்டி  தொடங்கப்பட்டதற்கான காரணம், பள்ளிக்கூடம் தன்னிறைவு அடைவதற்காக மட்டுமல்ல, பள்ளிக்கூட வளாகத்தை சுற்றி என்ன பிரச்சனைகள் நடைபெறுகிறது அதை உள்வாங்கிக் கொண்டு சரி செய்வதற்காகவும் தான் என்று தெரிவித்தார். அந்தப் பள்ளியில் படிக்கும் குழந்தையின் பெற்றோரே அதில் உறுப்பினராக இருப்பார்கள் எனவும் கூறிய அவர், அதேபோன்று கிராம சபை கூட்டங்களுக்கு ஆசிரியர்களும் சென்று பெற்றோர்களை நேரில் சந்தித்து ஆலோசிக்கும் பொழுது பிரச்சனைகளுக்கான தீர்வு உடனடியாக எட்டப்படும் என்றார்.

சிற்பி (ஸ்டூடெண்ட்ஸ் இன் ரெஸ்பான்சிபிள் போலீஸ் இனிஷியேடிவ்ஸ்)   திட்டத்தின் மூலமாக  குழந்தைகளும் சமூகத்திற்கான அவர்களது பங்களிப்பை அளித்து வருகிறார்கள் என்று  கல்விதான் சமதர்மத்தை கற்றுத் தரும் என அமைச்சர் கூறினார்.

பள்ளிகளில் ஜாதி பாகுபாடு பார்க்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுகிறது என்ற கேள்விக்கு பதிலளித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், அதற்குக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும் தமிழக அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என்றார். 

மேலும் படிக்க | ஊட்டச்சத்தில் தயிருடன் போட்டியிடும் சோயாபீன் தயிர்! பால் அலர்ஜி உள்ளதா? இதை சாப்பிடுங்க

14417 (Child abuse) டோல் ஃப்ரீ எண்கள் இன்னும் உபயோகத்தில் தான் உள்ளது அந்த எண்களை தொடர்பு கொண்டு, இதுபோன்ற ஏதேனும் சம்பவங்கள் நடைபெற்றால் புகார் அளிக்கலாம் என்று சொன்ன அமைச்சர், பெரும்பான்மையானோர் 100 எனும் எண்ணிற்கு தான் தொடர்பு கொண்டு புகார் அளிக்கின்றார்கள், எனவே நாங்கள் காவல்துறையினர் இடத்திலும் புகார்கள் வந்தால் அது தொடர்பான விவரங்களை சம்பந்தப்பட்ட துறைக்கு தெரிவித்து அதன்  தகவல்களை பகிர உத்தரவிட்டுள்ளோம் என்று கூறினார்.

கிருஷ்ணகிரியில் ஒரு பள்ளியில்  தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்ட விலையில்லா மிதிவண்டியில் எஸ்சி எஸ்டி என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் அதற்கு உண்டான விளக்கம் கேட்கப்பட்டுள்ளது அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார். 

தமிழகத்தில் இன்ஃப்ளுயன்சா  காய்ச்சல் தொற்று அதிகரித்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்ற கேள்விக்கு சுகாதார  துறை அதிகாரிகளின் குழு கலந்தாலோசித்து அதற்கான முடிவுகளை எடுப்பார்கள் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

மேலும் படிக்க | புதிய பாராளுமன்ற கட்டடத்திற்கு அம்பேத்கர் பெயர் வைக்க கோரும் சீமான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

Leave a Reply

Your email address will not be published.