ஸ்ப்ரைட் குளிர்பானப் பாட்டில் நிறம் மாறக்காரணம் என்ன.?
ஸ்ப்ரைட் பாட்டில் டெர்ரா பிளாட் என்ற பிளாஸ்டிக்கைக்கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்த பிளாஸ்டிக்கை மறு சுழற்சி செய்யலாம். ஆனால் புதிய பாட்டிலாக மாற்றம் செய்ய முடியாது. குறிப்பாக வண்ண நிற பாட்டில்கள் மறுசூழற்சி செய்வது கடினமானது என்பதோடு அதிக மாசுபாட்டையும் ஏற்படுத்தும். இருப்பினும் அவற்றில் இருந்து ஆடைகள் மற்றும் தரைவிரிப்புகள் இதுவரை தயாரிக்கப்பட்டு வந்தது.
இதோடு ஸ்ப்ரைட் குளிர்பான பாட்டில் பச்சை நிறத்தில் கொடுப்பதற்கு green polyethylene terephthalate எனும் ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது எனவும் இதை மறுபயனீடு செய்ய முடியாது எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த பாட்டில்கள் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை உற்பத்தி செய்வதாக COCa- Cola நிறுவனம் மீது அவ்வப்போது குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த சூழலில் தான், இனி மேல் பச்சை நிற பாட்டில்களில் ஸ்ப்ரைட் விற்கப்படாது எனவும் அதற்கு மாறாக 100 சதவீதம் மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக்கைக் கொண்டு வெள்ளை நிறத்தில் பாட்டில் தயாரிக்க நிறுவனம் முடிவு எடுத்துள்ளது. இந்த நடவடிக்கையால் கடந்த 2019 ஆம் ஆண்டில் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை விட 20 மில்லியன் பவுண்டுகள் பிளாஸ்டிக் கழிவுகள் குறையும் என்ற தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வெள்ளை நிற பாட்டிலில், பச்சை நிறத்தில் ஸ்ப்ரைட் எழுதப்பட்டு புதிய பேக்கிங் அறிமுகமாகவுள்ளதாகவும் கோகோ கோலா நிறுவனம் தெரிவித்துள்ளது.
Also Read : கழுத்தில் டை அணிவதை நிறுத்தி மின்சாரத்தை சேமியுங்கள்.. ஸ்பெயின் பிரதமர் அறிவுறுத்தல்
இத்தனை ஆண்டுகளாக பச்சை நிற பாட்டிலில் வெளிவந்த ஸ்ப்ரைட் திடீரென வெள்ளை நிற பாட்டிலில் வருவதை ஏற்றுக்கொள்வதற்கு பல நாள்கள் ஆனாலும், எந்தளவிற்கு இந்த பாட்டில்கள் சுற்றுச்சூழலைப் பாதித்துள்ளது என்று நினைத்தாலே மிகவும் வேதனையாக உள்ளது. எனவே நிச்சயம் இந்த மாற்றம் தேவை என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். குறிப்பாக பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் 2019 முதல் வெள்ளை நிற பாட்டிலில் ஸ்ப்ரைட் விற்பனையாகிறது. இந்நிலையில் தான் உலகம் முழுவதும் வண்ண பாட்டில்களின் பயன்பாட்டை நிறுத்த முடிவு எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.