Tamil News

AIADMK EX MINISTER JAYAKUMAR INTERVIEW | அண்ணாவை கேவலப்படுத்திய காங்கிரசுடன் கூட்டு வைத்திருக்கும் திமுக: சாரும் அதிமுக ஜெயக்குமார்


சென்னை: முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 114 வது பிறந்த நாளை முன்னிட்டு, அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது திருவுருவச் சிலையின் கீழ்  அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு அதிமுக சார்பில், அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது . அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பல கருத்துக்களை தெரிவித்தார். அண்ணாவை ஒருமையில் திட்டி அவரது பிறப்பை கேலி செய்து காங்கிரஸ்காரர்கள் சுவரில் எழுதினார்கள் என்று காங்கிரஸ் கட்சிக்கு குட்டு வைத்தார்.

தன்னை கேவலப்படுத்திய காங்கிரஸ் கட்சியின் செயலை பொருட்படுத்தாத அறிஞர் அண்ணா, தனது தம்பிகளை அமைதிப்படுத்தி மெழுகுவர்த்தி வெளிச்சம் காட்டி அதை மக்களுக்கு தெரியப்படுத்துமாறு கூறினார்.

மேலும் படிக்க | பிற மொழிகள் இந்திய அலுவல் மொழியாவது எப்போது? தமிழக முதல்வர் கேள்வி

அண்ணா வழியில் ஆட்சி நடத்துவதாக கூறும் விடியா அரசு என்று திமுகவை சாடிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அரசியலில நாகரிகம் பண்பாடு இன்றி எதிர்க்கட்சிகளை ஒடுக்க இன்றைய தமிழக அரசு முயற்சிப்பதாக தெரிவித்தார். புழுதிவாரி தூற்றி நாகரிகமற்ற அரசியலை செய்யும் திமுகவுக்கு, அண்ணா வழியில் வந்ததாக சொல்வதற்கு அருகதை இல்லை என்று அவர் தெரிவித்தார். 

திமுகவினர் கம்பி கட்டும் வேலையை நன்றாக செய்கின்றனர்.  திட்டங்களுக்கான பெயர் சூட்டு விழா மட்டுமே பிரமாண்டமாக  நடக்கிறது என்று தெரிவித்த முன்னாள் அமைச்சர், எனது துறைக்கு  இயக்குநராக இருந்தவர்  தற்போதைய தலைமை செயலாளர் இறையன்பு, எனவே அவரது கைவண்ணம் எனக்கு தெரியும், முதலமைச்சர் ஸ்டாலின் பாடுவது எல்லாம் அவரது கைவண்ணம்தான், அவர் எழுதிக் கொடுத்தைதை ஸ்டாலின்  பேசுகிறார் என்று திமுக தலைவரை நக்கல் செய்தார். 

மேலும் படிக்க | பெங்களூரில் இருக்கும் நடிகை மீரா மிதுன் விரைவில் சென்னை நீதிமன்றத்தில் ஆஜராவார்

குழந்தைகளுடன் சாப்பிட  ஸ்டாலினுக்கு புது பிளேட் , ஸ்பூன் கொடுத்தார்கள். ஆனால்  இரண்டு வாய் சாப்பிட்டு விட்டு தட்டிலேயே கை கழுவிவிட்டார், விவசாயிகளை அவமதிக்கும் விதமாக தட்டில் கை கழுவிவிட்டார் ஸ்டாலின் என்று தெரிவித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நரிக்குறவரை பழங்குடியினர்  பட்டியலில் சேர்க்க முதல்முறை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி குரல் கொடுத்தவர் ஜெயலலிதா என்று சுட்டிக் காட்டினார்.

ஆனால் திமுக கோயபல்ஸ் பிரசாரம் போல தாங்கள்தான் காரணம் என கூறுகின்றனர். மீனவர்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியது அதிமுக, இன்றுவரை திமுக அதற்கு குரல் கொடுக்கவில்லை என்று தெரிவித்தார். 

மாதம்தோறும் ஆயிரம் ரூபாய், பழைய ஓய்வூதியம், நீட் உள்ளிட்ட தேர்தல் பிரசாரங்களை திமுக இன்னும் நிறைவேற்றவில்லை. நீட் மசோதாவிற்கு  ஒப்புதல் பெற திமுகவிற்கு துப்பில்லை என்று தெரிவித்த அவர், ஒற்றைத் தலைமையுடன் வலுமிக்க இயக்கமாக அதிமுக இருக்கிறது , ஓபிஎஸ்  பண்ருட்டியார் உட்பட யாரை வேண்டுமனால்  சந்திக்கலாம் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க | இந்திக்கு நஹி சொன்ன தமிழகம் இருமொழிக் கொள்கையே தொடரும்

ஜெயலலிதாவை பார்ப்பது போல மக்கள் தன்னை பார்ப்பதாக சசிகலா கூறுவது தவறு என்று குறிப்பிட்ட அவர், சசிகலாவிற்கு நகைச்சுவை உணர்வு அதிகம் என்றும், சிரிக்காமல் ஜோக் அடிப்பவர் சசிகலா என்றும், மடுவுக்கும் மலைக்குமான வித்தியாசம்தான் ஜெயலலிதாவுக்கும்  சசிகலாக்கும் இடையில் உள்ளது என்று தெரிவித்தார். 

கட்சிக்கும் ஓபிஎஸ்க்கும் சம்பந்தம் இல்லை, எனவே அதிமுக அலுவலகத்தில் பன்னீர்ச்செல்வம் படத்தை நீக்கியது சரிதான் என்று தனது கட்சியின் விவகாரங்களையும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். 

இந்த ஆட்சியில் ஸ்டாலின், மா. சுப்பிரமணியன்  இருவரும் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதில் கெட்டிக்காரர்கள். மருத்துவமனைகளில் மாத்திரை இல்லை. ப்ளூ காய்ச்சலால் சென்னை , புறநகர் பகுதி அதிகமாக பாதிக்கப்பட்ட போதும் கட்டுப்படுத்த  அரசு   முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை” என்று ஆளும் காட்சியை அவர் விமர்சித்தார்.  

மேலும் படிக்க | தமிழுக்கு இந்தி எதிரியா… என்ன சொல்கிறார் அமித் ஷா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

Leave a Reply

Your email address will not be published.