Tamil News

Aiming to sell Rs 200 crore sweets for Diwali through Aavin company | தித்திக்கும் தீபாவளி: ஆவின் நிறுவனம் மூலம் ரூ.200 கோடி இனிப்புகள் விற்க இலக்கு


தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தை நம்பியுள்ள 4.5 லட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நிர்ணயிக்கும் வகையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு 200 கோடி ரூபாய்க்கு இனிப்பு விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விலை குறைவான 9 வகையான இனிப்புகள் தயாரிக்கும் பணிகள் 10 மாவட்டத்த்தில் இந்த முறை செயல்படுத்தப்பட உள்ள நிலையில் தயாரிப்பு மற்றும் சிறப்பு பேக்கிங் ஏற்பாடுகளை அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் ஆய்வு செய்தார்.

இது தொடர்பாக தமிழக பால் வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் அளித்த பேட்டியில் கூறியதாவது., வரும் தீபாவளி பண்டிகையையொட்டி ஆவின் நிறுவனத்தின் சார்பில் 9 வகையான இனிப்புகளும் கார வகைகளில் மிக்சர் உள்ளிட்ட காம்போ பேக் என 9 வகையான இனிப்புகளை விற்பனைக்கு தயார் செய்யும் பணிகளை தமிழக பால் வளத்துறை அமைச்சர் நாசர் ஆவின் நிறுவன மேலான் இயக்குனர் சுப்பையன் ஆகியோர் அறிமுகப்படுத்தினார்.

மேலும் படிக்க | இணையத்தில் வெளியான ஜெயிலர் வீடியோ – படக்குழு அதிர்ச்சி

முன்னதாக அம்பத்தூரில் உள்ள ஆவின் நிறுவனத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அவர், இனிப்புகளை சுத்தமாக தயாரிக்கப்படுகிறதா என பார்வையிட்டதுடன் இனிப்பு பேக்குகளை பேக் செய்யும் புதிய இயந்திரத்தின் இயக்கத்தை துவக்கி வைத்தார். மேலும் பணியாளர்களை சுகாதாரத்துடன் இனிப்புகளை தயாரிக்கும் பணியில் ஈடுப்பட்ட வலியுறுத்தினார்.

இதன்பின் இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க கடந்த ஆண்டு ஆறு இனிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் இந்தாண்டு ஒன்பது வகையான ஆவின் பொருட்கள் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது.. அதேபோல் கடந்த ஆண்டு ஆவின் பொருட்களின் விற்பனை 82 கோடியே 24 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்து சாதனைப்படைத்தது. இந்தாண்டு 200 கோடி ரூபாய்க்கு ஆவின் இனிப்பு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக, அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார்.

கடந்த ஆண்டு உத்தரவிட்டது போல் இந்தாண்டும் அரசு அதிகாரிகள் ஆவின் நிறுவனத்தில் இனிப்புகளை வாங்க வேண்டும் என்ற உத்தரவின் கீழ் ஆவின் பொருட்களின் விற்பனை தொடர்ந்து நடைபெறுவதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.. மேலும் அம்பத்தூர் மட்டுமல்லாமல் திருவள்ளூர், கோயம்புத்தூர், விழுப்புரம், திருச்சி, சேலம், நாமக்கல், மதுரை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் ஆவின் நிறுவன கிளைகள் அமைப்பதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டு அதற்கான பணிகளும் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

சிறப்பு விற்பனைக்கு தொலைபேசி எண்கள் மூலம் புக்கிங் செய்தால் இலவச டோர் டெலிவரியும் செய்து தரப்படும் என அமைச்சர் நாசர் செய்தியாளரிடம் கூறினார். இந்த நிகழ்ச்சியில் ஆவடி மாநகர மேயர் உதயகுமார், கும்மிடிப்பூண்டி சட்ட மன்ற உறுப்பினர் கோவிந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதேபோல் ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு இனிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதில் மோத்தி பாக்,ஸ்பெசல் காஜு பிஸ்தா ரோல்,ஸ்பெசல் நட்ஸ்அல்வா, காஜு கத்திலி,கருப்பட்டி அல்வா திருநெல்வேலி அல்வா ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டது. அதில் ஒவ்வொரு பாக்கெட்டிலும் 250 கிராம் எடை கொண்ட 9 பொருட்களின் விலை பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

1.நெய் பாதுஷா 250.கி – ரூபாய் 190
2.ஸ்பெஷல் நட்ஸ் அல்வா 250.கி- ரூபாய் 190
3.மோத்தி பாக் 250.கி – ரூபாய் 180
4.காஜூ பிஸ்தா ரோல் 250.கி – ரூபாய் 320
5.காஜூ கட்லி 250.கி – ரூபாய் 260
6.திருநெல்வேலி அல்வா 250.கி – ரூபாய் 125
7.கருப்பட்டி அல்வா 250.கி- ரூபாய் 170
8.வகைப்படுத்தப்பட்ட இனிப்பு வகைகள் 500.கி – ரூபாய் 450
9.ஆவின் மிக்சர் 200.கி.- ரூபாய் 100

மேலும் படிக்க | ‘ஏம்மா…ஆவி கீவி புகுந்துடுச்சா?’: சமையலறையில் பெண் ஆடிய பேய் நடனம், வைரல் வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

Leave a Reply

Your email address will not be published.