Health

Allu Arjun’s mass look for Pushpa 2 released | புஷ்பா 2: கெட்டப்பை வெளியிட்டு ஆழம் பார்க்கும் அல்லு அர்ஜூன்

புஷ்பா: தி ரைஸ் திரைப் படத்தின் வெற்றியின் மூலம் பாக்ஸ் ஆபிஸில் சரித்திரம் படைத்தார் அல்லு அர்ஜூன். இந்தப் படத்தின் அபார வெற்றிக்குப் பிறகு, சுகுமார் இயக்கத்தில் இரண்டாம் பாகத்தில் பணியாற்றத் தயாராகிவிட்டார் அவர். முதல் பாகத்தைவிட மாஸாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் அல்லு அர்ஜூன் மற்றும் இயக்குநரும், எப்படியான கெட்டப்பில் இருக்கலாம் என யோசித்து வருகின்றனர். அல்லு அர்ஜூன் கெட்டப்புக்காக அண்மையில் பல்வேறு ஸ்டைல்களில் போட்டோ ஷூட் நடத்தப்பட்டுள்ளது. அதில் இரண்டு லுக்குகளை மட்டும் ஓகே செய்துள்ளனர்.

அல்லு அர்ஜூன், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சால்ட் பெப்பர் ஸ்டைலில் எடுத்த புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். சிகரெட் பிடித்துக் கொண்டு மார்டன் டிரஸ்ஸில் அந்த புகைப்படத்தில் மாஸாக இருக்கிறார். இது புஷ்பா 2 படத்திற்காக எடுக்கப்பட்ட போட்டோஷூட்டாக இருக்கலாம் என கூறப்படுகிறது. ரசிகர்களிடம் ஆழம் பார்ப்பதற்காக இரண்டு லுக்குகளையும் அல்லு அர்ஜூன் ஷேர் செய்து, அதன் மூலம் கிடைக்கும் ரெஸ்பான்ஸ் மூலம் கெட்டப்பை ஓகே செய்யலாம் என முடிவெடுத்திருக்கிறாராம். 

‘தி லெஜெண்ட்’ படத்தின் ஒரு வார வசூல் எவ்வளவு தெரியுமா?

சினிமா வட்டாரத்தில் இருந்து வெளியாகியிருக்கும் தகவலின்படி, பச்சைக்குத்தியவாறு ஒரு லுக்கும், காதில் கடுக்கன் போட்டவாறு ஒரு லுக்கும் ஒகே செய்யப்பட்டிருக்கிறது. இந்த இரண்டில் ரசிகர்களிடம் அதிக ரெஸ்பான்ஸ் கிடைக்கும் லுக்கை புஷ்பா 2 படத்திற்காக பயன்படுத்த திட்டமிட்டிருக்கிறார்கள். புஷ்பா 2 படத்தைப் பொறுத்தவரை பல்வேறு முக்கிய பிரபலங்கள் இணைய இருகின்றனர். விஜய் சேதுபதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். முதல் பாகம் பாக்ஸ் ஆஃபீஸில் 400 கோடிகளுக்கும் மேல் வசூலித்திருப்பதால், அந்த வெற்றிக்கு இணையாக திரைக்கதையை வடிவமைத்து வைத்திருக்கிறாராம் இயக்குநர். விரைவில் முழு வீச்சில் சூட்டிங் தொடங்க இருக்கிறது. 

மேலும் படிக்க | ரோலக்ஸ் – டில்லி நேருக்கு நேர் சந்திக்க போவது எப்போது? சூர்யா கொடுத்த மாஸ் அப்டேட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Source link

Leave a Reply

Your email address will not be published.