Tamil News

Amudhavum Annalakshmiyum serial update | அன்னம் போட்ட கண்டிஷனால் அமுதா எடுத்த முடிவு – அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்


அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்: தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘அமுதாவும் அன்னலட்சுமியும்’ சீரியல்.

அமுதாவும் அன்னலட்சுமியும்: இன்றைய எபிசோட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் செல்வராஜ் அறைக்குள் சென்று வடிவேலுவை அடி வெளுக்க அவன் செல்வராஜிடம் நான் பண்ணதை வெளில சொன்னீங்கன்னா உண்மையாவே விஷம் குடிச்சி செத்துருவேன்.. உங்க பேரப் பிள்ளை அனாதையா ஆயிரும் என மிரட்டுகிறான். 

மேலும் படிக்க | Prakash Raj: ‘ஹாய் செல்லம்’ வில்லத்தனத்திலும் ஹீரோயிசம் காட்டிய பிரகாஷ் ராஜ்ஜிற்கு பிறந்தநாள் இன்று..!

இதனால் செல்வராஜ் வெளியே வந்து வடிவேலு பிழைத்து விட்டதாக சொல்ல அன்னம் அமுதாவிடம் என் பையன் உயிர் போயி வந்திருக்கு, அவனுக்கு கேண்டீன் காண்டராக்டை குடுத்தே ஆக வேண்டும் என சொல்கிறாள். 

செல்வராஜிடம் அமுதா என்ன செய்ய என கேக்க, அவர் பதவி, பொறுப்பு பற்றி சொல்லி, உனக்கு எது நியாயமா படுதோ அதை செய்யும்மா என சொல்கிறார். இதனிடையே மறுநாள் காலையில் அமுதா ஸ்கூல் கிளம்ப, அன்னம் கேண்டீன் பற்றி கேக்க, அமுதா முடியாது என மறுக்கிறாள். 

இதனால் சுமதி அமுதா அவளது அண்ணனுக்கு அந்த காண்ட்ராக்டை குடுத்துவிட்டதாக சொல்ல அன்னலட்சுமி அதை கேட்டு அப்செட் ஆகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

அமுதாவும் அன்னலட்சுமியும்: சீரியலை எங்கு பார்ப்பது

அமுதவும் அன்னலட்சுமியும் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.

மேலும் படிக்க | Thalapathy 68: விஜய் – வெங்கட்பிரபு படத்தின் பூஜை எப்போது? வெளியானது லேட்டஸ்ட் அப்டேட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ





Source link

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments