Tamil Entrepreneurs

Anand Mahindra lauds Mumbai’s new world-class bus stops | பல்வேறு சிறப்புகளுடன் புதுப்பிக்கப்படும் பேருந்து நிறுத்தங்கள்


மும்பையில் உள்ள பேருந்து நிறுத்தங்கள் புதுப்பிக்கப்பட உள்ளதாக மகாராஷ்டிர மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் ஆதித்ய தாக்கரே அண்மையில் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இந்நிலையில், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவன அதிபர், ஆனந்த் மஹிந்திரா இந்தத் திட்டத்தை பாராட்டியுள்ளார்.

இதுதொடர்பாக வீடியோ ஒன்றை, டிவிட்டர் பக்கத்தில் ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்து கொண்டுள்ளார். மும்பையில் அமையவிருக்கும் 105 பேருந்து நிறுத்தங்கள் இப்படித்தான் இருக்கப் போகிறது என்று அவர் குறிப்பிட்டிருந்தார். குறிப்பாக, பேருந்து நிறுத்தங்களை புதுப்பிக்கும் இத்திட்டம் மிக அற்புதமானது என்று அவர் பாராட்டியிருந்தார்.

வீடியோவில் பார்த்ததன் அடிப்படையில் புதிய பேருந்து நிறுத்தங்களில் என்னென்ன வசதிகள் இடம்பெறும் என்பது தெரியவந்துள்ளது. அதாவது உடற்பயிற்சி செய்வதற்கான பார்கள் மற்றும் பேருந்து நிறுத்த மேற்கூரையில் செடிகள் வளர்ப்பு என இதுவரை பார்த்திராத புதுமையான வகையில் அது அமைய இருக்கிறது. இந்த வீடியோ தொடர்பான பதிவில் அமைச்சர் ஆதித்ய தாக்கரேவை ஆனந்த் மஹிந்திரா டேக் செய்துள்ளார்.

மும்பை பெருநகர மாநகராட்சியில் உள்ள பல்வேறு பேருந்து நிறுத்தங்கள் தற்போது புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. இதன்படி பேருந்து நிறுத்தங்களை தூய்மையானதாக, பாதுகாப்பானதாக, பார்ப்பதற்கு அழகானதாக வைத்திருக்க மும்பை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

புதிய திட்டத்தின் படி போரிவாலி மேற்கு, சான்குருஸ், குர்லா, கட்கோபார், மலாய், விக்ரோலி போன்ற பகுதிகளில் உள்ள பேருந்து நிறுத்தங்கள் புதுப்பிக்கப்பட உள்ளன. இவை அனைத்தும் வெகுவிரைவில் புதுக்கப்படும் என்று மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் ஆதித்ய தாக்கரே அண்மையில் கூறியிருந்தார்.

Also Read : இந்த பிரபலமான சிற்பத்தில் உங்களுக்கு முதலில் தோன்றும் உருவம் நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை உணர்த்தும்!

நெட்டிசன்கள் கேள்வி

புதிய பேருந்து நிறுத்த திட்டங்களை ஆனந்த் மஹிந்திரா பாராட்டியுள்ள அதே வேளையில், அதுகுறித்து நெட்டிசன்கள் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். பேருந்து நிறுத்தங்களில் உடற்பயிற்சிக்கான பார்கள் அமைக்கப்படுவது நல்ல விஷயம் தான் என்றாலும், மேற்கூரையில் அமைக்கப்படும் செடிகளை பராமரிப்பது யார் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேற்கூரையில் அமைக்கப்படும் செடிகளுக்கு தண்ணீர் விடுவது கடினம் என்றும், அதற்குப் பதிலாக சூரிய மின் உற்பத்தி தகுடுகளை பொருத்தினால், மின்சாரமும் அதன் மூலமாக கூடுதல் வருமானமும் கிடைக்கும் என்று நெட்டிசன்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Also Read : வகுப்பறையில் மாணவ, மாணவிகள் அட்டகாசம் – வைரல் வீடியோ

ஆனந்த் மஹிந்திராவின் பதில்

நெட்டிசன்களின் விமர்சனத்திற்கு ஆனந்த் மஹிந்திரா பதில் அளித்துள்ளார். இதுகுறித்த அவரது பதிவில், “இதே கேள்வியை நானும் கூட முன்வைத்தேன். தோராயமாக, மேற்கூரையில் செடிகள் வளர்க்கப்படும் பேருந்து நிறுத்தங்கள் என்பது பூங்காக்களுக்கு அருகாமையில் அமைய இருக்கின்றன. வாய்ப்பு உள்ள மற்ற இடங்களின் மேற்கூரையில் சூரிய மின் உற்பத்தி தகடுகள் அமைக்கப்படும். பேருந்து நிறுத்தங்கள் சுத்தமானதாக இருக்க வேண்டும் என்பதே அவர்களது பிரதான நோக்கம் ஆகும்’’ என்று கூறியுள்ளார்.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.





Source link

Leave a Reply

Your email address will not be published.