Tamil News

Andimadam Paappapati Mortgage Shop 1.5 kg gold Jewelry Theft | அடகுக் கடையில் சுவரை உடைத்து ஒன்றரை கிலோ நகை கொள்ளை


மதுரை: அடகு கடை சுவற்றில் துளையிட்டு ஒன்றரை கிலோ தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் சங்கர் இவர் ஆண்டிமடம் அருகே உள்ள பாப்பாக்குடி கிராமத்தில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து இன்று கடைக்கு வந்த உரிமையாளர் சங்கர் மற்றும் பணியாளர்கள்  கடையை திறந்து பார்த்த போது கடையில் உள்ளே சுவற்றில் தொலையிட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதனையடுத்து சங்கர் கடையில் இருந்த நகைகள் குறித்து ஆய்வு செய்ததில் சுமார் ஒன்றரை கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மேலும் படிக்க | அயோதிக்கு வந்த NRI பெண்ணிடம் திருட்டு: பாஸ்போர்ட், பணம் மாயம்

நகைகள் திருடு போனது தொடர்பாக, நகைக்கடை உரிமையாளர் சங்கர், மீன்சுருட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் படிக்க | அலுவலகத்தில் வேலை பார்க்க பிடிக்கவில்லையா? ஆய்வாளர்கள் சொல்லும் அதிர்ச்சி தகவல்

மோப்ப நாய்கள் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்கள் குறித்து அடையாளம் சேகரிக்கப்பட்டது. மேலும் நகை அடகு கடையில் கொள்ளையில் ஈடுபட்ட  கொள்ளையர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த நகைக்கடை கொள்ளை விவகாரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க | நவம்பர் மாதத்தில் எத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ





Source link

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments