Health

Bigg Boss Janani About Rachitha Look | எருமைக்கு சேலை கட்டியது போல் இருக்கு, ஜனனிக்கு பதிலடி கொடுத்த கணவர்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்து, தற்போது இந்நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கின்றது.  கடந்த மாதம் 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட பிக்பாஸ் -6 நிகழ்ச்சியிலிருந்து இதுவரை 7 போட்டியாளர்கள் வெளியேறிவிட்டனர்.  முதலில் ஜி.பி.முத்து தானாகவே முன்வந்து விலகினார், அவரை தொடர்ந்து சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, நிவாஷினி, மகேஸ்வரி, உள்ளிட்டவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

இதற்கிடையில் சென்ற வாரம் நடைபெற்ற எவிக்‌ஷனில் ராபர்ட் மாஸ்டர் வெளியேறி இருக்கிறார். இதற்கிடையில் இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் ரச்சிதா, குயின்சி, மைனா, கதிரவன், ஜனனி, ஷிவின், தனலட்சுமி, மணிகண்டன் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர். மேலும் இந்த வார கேப்டனாக அஜீம் திர்வாகி உள்ளார்.

 மேலும் படிக்க | நயன்தாராவை போல் இருக்கும் அவரது ரீல் மகள்…வாவ் வாட் அ ப்யூடி..

இந்தநிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் போட்டியாளரான ஜனனி ரச்சிதாவின் உடை பற்றி விமர்சித்து இருப்பது சர்ச்சையாகி இருக்கிறது. அதன்படி அவர் ரச்சிதாவை விமர்சித்த வீடியோ வைரலாகி வருகின்றது. அந்தவகையில் அவர், இந்த நிகழ்ச்சியில் கருப்பு புதியவை ஒன்றை ரச்சிதா அணிந்திருந்தார். அப்போது மைனா, புடவையில் நீ வடிவமாக அழகாய் இருக்கிறாய். உனக்கு தான் புடவை பொருத்தமாக இருக்கிறது என்று கூறியிருந்தார். அதி நாளில் ரச்சிதாவை தவிர ஜனனி, தனலட்சுமி என பலருமே புடவை அணிந்திருந்தார்கள். இதனால் மைனா ரச்சிதாவை மட்டும் புகழ்ந்தது ஜனனிக்கு பிடிக்கவில்லை. 

இதனால் கடுப்பான ஜனனி அங்கிருந்து வந்து தனலட்சுமி இடம், நான் புடவை சரி செய்து கொண்டிருக்கும்போது மைனா வேணும் என்று ரச்சிதாவை புகழ்ந்து பேசியுள்ளார். ரச்சிதாவை என்ன வடிவாக இருக்கிறார்? எருமை மாட்டுக்கு கட்டி விட்ட மாதிரி இருக்கு என்று கிண்டல் அடித்து பேசியிருப்பது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இதை பார்த்த நெட்டிசன்கள் பலருமே ஜனனியை விமர்சித்து வந்தனர்.

இந்த நிலையில் தற்போது  ஜனனிக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் ரச்சிதாவின் கணவ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார். அதன்படி அதில், உங்களுக்கு பின்னால் பேசுபவர்கள், நம்பிக்கை இல்லாத நண்பர்கள் மற்றும் துரோகிகளை கடந்து விடுங்கள். மற்ற போட்டியாளர்கள் போல் விளையாடுங்கள். என அவர் கூறி இருக்கிறார்.

மேலும் படிக்க | மனைவி வெளியிட்ட நிர்வாண புகைப்படம்! பின்னணியை உடைத்த விஷ்ணு விஷால்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

Leave a Reply

Your email address will not be published.