Tamil Entrepreneurs

Can You Spot the Rogue Car in This Optical Illusion Image | தாறுமாறாக செல்லும் கார் உங்கள் கண்களுக்கு தெரிகிறதா


நீங்கள் சாலையில் பயணம் செய்யும் போது, உங்களைச் சுற்றியிலும் ஏராளமான கார்களைப் பார்த்திருப்பீர்கள். அதில், சில கார்கள் போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்றிச் செல்லும். வேறு சில கார்கள் போக்குவரத்து விதிகளை முறைப்படி பின்பற்றாமல் தாறுமாறாகச் செல்லும். அதுபோன்ற அத்துமீறலில் ஈடுபடும் கார் எதுவென்று சாலையில் நீங்கள் எளிதாகக் கண்டுபிடித்து விடுவீர்கள்.

ஆனால், அதையே ஆப்டிக்கல் இல்யூஷன் படம் ஒன்றில் கண்டுபிடிக்க சொன்னால்? ஆம், ஆப்டிக்கல் இல்யூஷன் என்னும் மாயத்தோற்ற படத்தில், அப்படியொரு காரை கண்டுபிடிப்பது மிகவும் சிரமமான காரியம். இணையத்தில் இந்தப் படம் இப்போது டிரெண்டிங்கில் வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்தப் படத்தில் நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு காரும் சாதாரணமானதாக உங்களுக்கு தோன்றலாம். ஆனால், எந்த கார் சாலை விதியை பின்பற்றாமல் செல்கிறது என்பதை உற்று நோக்கி பார்த்தால், நீங்கள் உங்களது தலையை பிய்த்துக் கொள்ள வேண்டியிருக்கும்.

ஒரு திசையில் பயணிக்கும் கார்கள்

உங்கள் மூளையின் செயல் திறனுக்கும், சிந்தனைத் திறனுக்கும் சவால் விடுப்பதாக அமைந்துள்ள படத்தில் அனைத்து கார்களுமே ஒரே திசையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். எந்த காரும் எதிர் திசை நோக்கி பயணிக்கவில்லை. அனைத்து கார்களுமே ஒன்றன் பின் ஒன்றாக வரிசையில் சென்று கொண்டிருப்பதாகத் தானே நம் கண்களுக்கு தெரிகிறது.

விதியை மீறும் காரை கண்டுபிடியுங்கள்

உங்கள் பார்வையில் சாதாரணமாகத் தோன்றும் இதே படத்தில் தான், போக்குவரத்து விதியை மீறி தாறுமாறாக சென்று கொண்டிருக்கும் காரின் படமும் இருக்கிறது. அதை ஒரு நிமிடத்திற்குள் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். கண்டுபிடித்து விட்டீர்களா?

Also Read : பலமுறை பார்த்தாலும் கடைசி வரை குழப்பும் வேற லெவல் ஆப்டிகல் இல்யூஷன் வீடியோ!

உங்களுக்கான ஹிண்ட்

படத்தில் இருக்கும் அனைத்து கார்களுமே மஞ்சள் விளக்கை எரியவிட்டபடி செல்கின்றன. ஒருசில கார்களில் இண்டிகேட்டர் விளக்கும் எரிகிறது. ஆனால், ஒரேயொரு காரில் மட்டும் இந்த விதிமுறை பின்பற்றப்படவில்லை. இப்போது கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

ஒவ்வொரு காராக பார்த்து சொல்லுங்கள். அனைத்துக் காரிலும் விளக்கு எரிவதைப் போன்ற தோற்றம் இருக்கிறதா? இன்னமும் சிரமமாக இருக்கிறதா? சரி கவலையை விடுங்கள். விடை இதுதான். மூன்றாவது வரிசையில், மூன்றாவதாக இருக்கும் கார் தான் விதிமுறைகளைப் பின்பற்றவில்லை. அதாவது, கரும்பச்சை நிற கார் தான் அது. இந்த காரால் விபத்து நடைபெற கூடும்.

Also Read : இந்த படத்தில் முதலில் என்ன தெரிகிறதோ அதை பொறுத்து நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை அறியலாம்.!

விழிப்புணர்வுக்காக…

நம் சிந்தனைத் திறனுக்கு சவால் விடுக்கும் அதே வேளையில், சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்தப் படம் வெளியிடப்பட்டுள்ளது. இதை உங்கள் நண்பர் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு பகிர்ந்து, அவர்களிடம் இருந்து சுவாரஸ்யமான பதில்களை பெறலாம்.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.



Source link

Leave a Reply

Your email address will not be published.