Covid-19

Corona treatment : க்சிஜன் அளவு 90க்கு குறைவாக இருந்தால் மட்டுமே கொரோனா மருத்துவமனையில் அனுமதி – தமிழக அரசு புதிய நெறிமுறைகள் அறிவிப்பு

கொரோனா சிகிச்சைக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், அறிகுறிகளுடன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு, ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 94 இருந்தால் அவர்கள் மருத்துவமனைக்கு வரக்கூடாது. மாறாக வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆக்சிஜன் அளவு 90 முதல் 94-க்குள் இருப்பின், அவர்கள் ஆரம்ப சுகாதார நிலையங்கள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். ஆக்சிஜன் அளவு 90-க்கு கீழாக இருப்பின், அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக […]

Covid-19

MK Stalin : ஊரடங்கிற்கு முற்றுப்புள்ளி வைக்க…, உங்கள் கையில்தான் இருக்கு மக்களே… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

ஊரடங்கிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும், அது மக்களின் ஒத்துழைப்பால்தான் சாத்தியமாகும் எனவும் வலியுறுத்தி மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவில், அவர் கூறியிருப்பதாவது: அனைவருக்கும் வணக்கம்! எல்லாரும் பாதுகாப்பாக இருக்கிறீர்களா?, கொரோனா தொற்று ஒருவரிடம் இருந்துதான் மற்றொருவருக்குப் பரவுகிறது. அதனால் தொற்று தங்கள்மீது பரவாமல் இருக்க ஒவ்வொருவரும் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ள வேண்டும். அதேபோல் நீங்களும் மற்றவர்களுக்கு பரப்பிவிடாமல் கவனமாக இருக்க வேண்டும். ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் சங்கிலியை உடைத்தாலே கொரோனா பரவலைத் தடுத்துவிட முடியும். […]

Covid-19

Coronavirus | கொரோனா காலத்தில் தாய் சேய் நலம் பேணுவது எப்படி? – டாக்டர் விஜயாவின் பதிகள்

கொரோனா காலத்தில் தாய் சேய் நலம் பேணுவது எப்படி? என்பது பற்றிய நேயர்களின் கேள்விகளுக்கு விளக்கமளிக்கிறார் டாக்டர் விஜயா. Source link

Covid-19

Coronavirus | சீன விஞ்ஞானிகள்தான் கொரோனாவை உருவாக்கினர்: வெளியான புதிய ஆதாரம்

மக்களின் இயல்புத் தன்மையை முடக்கிப் போட்டதோடு, 35 லட்சத்திற்கும் அதிகமானோரின் உயிரைப் பறித்துள்ளது கொரோனா வைரஸ். அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் கடும் குற்றச்சாட்டுகளுக்கு பிறகு, உலக சுகாதார அமைப்பு கொரோனா உருவான இடம் தொடர்பாக சீனாவில் ஆய்வு மேற்கொண்டது. ஆனால், தொற்று ஊகான் ஆய்வகத்தில் உருவாக்கப்படவில்லை எனவும், இறைச்சி சந்தையில் இருந்து தான் பரவியது எனவும், அந்த ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், கொரோனா உருவான விதம் தொடர்பாக, பிரிட்டனை சேர்ந்த பேராசிரியர் அங்கஸ் டால்லீஷ் […]

Covid-19

Daksha Drone For Corona Relief Work | கொரோனா தடுப்பு பணிக்காக உதவும் தக்‌ஷா குழு உருவாக்கிய ட்ரோன்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் “தக்‌ஷா” தொழில்நுட்ப குழுவினர் கொரோனா பேரிடருக்கு உதவும் வகையில் புதிய வகை ட்ரோனை உருவாக்கியுள்ளனர். இதன்மூலம் நெல்லை மாநகராட்சியில் நெரிசல் மிகுந்த நகர்ப்பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வந்தது. இந்த குழுவினர் பெங்களூரைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துடன் இணைந்து வேதிப்பொருட்களுக்கு பதிலாக எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழ வகைகளிலிருந்து பெறப்படும் வேதிக்கலவை, வெஜிடப்பிள் கிளிசரின் ஆயில் எனப்படும் கலவை உள்ளிட்டவைகளை கொண்டு தயாரிக்கப்பட்ட நுண்ணுயிர் ஒழிப்பு மருந்தை ட்ரோன்கள் உதவியுடன் தனிமைப்படுத்தப்பட்ட […]

Covid-19

Corona Vaccine : ஜூலை மாத இறுதிக்குள் 25 கோடி கொரோனா தடுப்பூசி கொள்முதல் : மத்திய அரசு திட்டம்

ஜூலை மாத இறுதிக்குள் சுமார் 25 கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, 12 கோடி கோவிஷீல்ட் தடுப்பூசிகளையும், மீத எண்ணிக்கைக்கு கோவாக்சின் மற்றும் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் எனவும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில், மேலும் 30 கோடி தடுப்பூசிகள் கொள்முதல் செய்யப்பட உள்ளன. பல்வேறு மாநிலங்களும் கொரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை நிலவுவதாக குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில், தடுப்பூசிகள் தடையின்றி விநியோகிக்கப்படுவதை உறுதி செய்யும் நோக்கில், மத்திய அரசு […]

Covid-19

தமிழகத்தில் இன்றே கடைசி – கொரோனா மெகா தடுப்பூசி முகாம்கள் நிறைவு – அமைச்சர் மா சுப்பிரமணியன்! | Corona Vaccination camp in Tamil Nadu complete today – Minister Ma Subramanian

Chennai oi-Mohan S Published: Sunday, September 25, 2022, 17:12 [IST] சென்னை: தமிழகத்தில் நடைபெற்று வந்த கொரோனா மெகா தடுப்பூசி முகாம்கள் இன்றோடு நிறைவடைந்ததாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் முதல், புதன் கிழமைகளில் அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி முகாம் நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டார். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், தமிழக சுகாதாரத்துறை சார்பில், தொடர்ந்து தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த சிறப்பு முகாம்கள், அரசு […]