Health

Cool Suresh Acting With Simbu In Upcoming Movie | கூல் சுரேஷுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிம்பு பட்ட கஷ்டம்லாம் வீண் போகலை

தமிழ் திரையுலகில் மீண்டும் தனது மதிப்பை உயர்த்தி வெற்றிநாயகனாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சிலம்பரசன்.  கடந்த ஆண்டு ‘மாநாடு’ என்கிற வெற்றிப்படத்தை கொடுத்து ரசிகர்களை மகிழ்ச்சியில் மூழ்க செய்தவர் இப்போது ‘வெந்து தணிந்தது காடு’ எனும் மற்றொரு ஹிட் படத்தை கொடுத்து ரசிகர்களை திக்குமுக்காட செய்திருக்கிறார்.  கவுதம் மேனன்-சிம்பு காம்போவில் இதுவரை வெளியான படங்கள் பெற்ற வெற்றியை விட இப்படம் ரசிகர்களால் மத்தியில் அதிகளவு பாசிட்டிவ் கமெண்டுகளை பெற்று வருகிறது.  ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் வரவேற்பை பெற்றுள்ளன, அதிலும் குறிப்பாக ‘மல்லிப்பூ’ என்கிற பாடல் பலரையும் கவர்ந்துள்ளது.  எழுத்தாளர் ஜெயமோகன் கைவண்ணத்தில் எழுதப்பட்ட இந்த கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட படம் இதுவரை ரூ.50 கோடி பாக்ஸ் ஆபீஸில் வசூலை எட்டியுள்ளது. 

மேலும் படிக்க | படம் வெளியானது எனக்கே ஆச்சர்யம்தான் – சிம்பு

‘வெந்து தணிந்தது காடு படம்’ வெளியாவதற்கு முன்னரே இப்படத்தின் பெயர் பலரின் மனதிலும் ஆழமாக பதிந்திருந்தது, அதற்கு முக்கிய காரணம் நடிகர் கூல் சுரேஷ் தான்.  சிம்புவின் வெறித்தனமான ரசிகரான கூல் சுரேஷ் இந்த படம் பற்றிய அறிவிப்பு வெளியானத்திலிருந்தே, எங்கு பார்த்தாலும் படத்தின் பெயரையே சொல்லி இலவசமாக ப்ரோமோஷன் செய்து வந்தார்.  அதுமட்டுமின்றி ‘வெந்து தணிந்தது காடு, தலைவன் சிம்புவுக்கு வணக்கத்த போடு’ என்றெல்லாம் அவர் வாய்க்கு வந்தபடி ரைமிங்காக பேசி படத்தின் பெயரை ட்ரெண்டாக்கினார்.  இதனை தொடர்ந்து இணையவாசிகள் பலரும் இதேபோல ரைமிங்காக அவரவர்களின் சொந்த வசனங்களையும் போட்டு ட்ரெண்டாக்கி வந்தனர்.  அதிலும் கூல் சுரேஷ் எந்த நடிகர்களின் படத்திற்கு சென்றாலும் அங்கு அந்த படத்தின் ரிவியூவை சொல்வாரோ இல்லையோ வெந்து தணிந்தது காடு என சொல்லி இப்படத்திற்கு ப்ரோமோஷன் செய்வது மட்டும் நிறுத்தமாட்டார்.

coolsuresh

ஒருவழியக இந்த படமும் ஹிட் ஆகிவிட்டது, படம் ஹிட் ஆனதை எண்ணி கூல் சுரேஷ் ஆனந்த கண்ணீர் விட்டார்.  படத்திற்கு இவ்வளவு நாளாக இலவசமாக ப்ரோமோஷன் செய்த கூல் சுரேஷை, சிம்பு கண்டுகொள்ளவில்லை என சில பரவிய நிலையில் தற்போது சிம்பு ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளார்.  கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற படத்தின் வெற்றிவிழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிம்புவிடம் பத்திரிக்கையாளர்கள் கூல் சுரேஷ் பற்றி கேள்வி எழுப்பினர்.  அப்போது பேசிய சிம்பு தனது அடுத்த படத்தில் கூல் சுரேஷிற்கு ஒரு கதாபாத்திரம் கொடுக்கப்போவதாக கூறியுள்ளார்.

மேலும் படிக்க | பிறந்தநாளில் விக்னேஷ் சிவனுக்கு நயன்தாரா கொடுத்த பரிசு இதுதான்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Source link

Leave a Reply

Your email address will not be published.