Covid-19

COVID-19 Vaccine | பார்ப்பதற்குதான் ‘டான்’ போன்ற தோற்றம்… வேக்சின் போட்டவுடன் ஊசி பயத்தில் மயக்கம்…

பிரேசிலில் வேக்சின் போட்டுக்கொண்ட ஒருவர், அதீத பயத்தால் நடுங்கி கீழே விழுந்த நிலையில், அவரது மனைவி அதனை ‘கூலாக’ படம்பிடித்து கொண்டிருந்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. அந்த வகையில் பிரேசிலிலும் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு பல்வேறு கட்டங்களாக அந்நாட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள சென்றுள்ளார். அவருக்கு ஊசி என்றாலே பயம் என்பதால், நடுக்கத்துடனேயே வரிசையில் நின்றுள்ளார்.

முன்னிருந்த ஒவ்வொருவரும் செல்லச் செல்ல அவருக்கு பயமும் பதட்டமும் தொற்றிக்கொள்கிறது. தனது கணவருக்கு ஊசி என்றால் பயம் என்பதை அறிந்திருந்த அவரின் மனைவி, அந்த நபரின் அனைத்து செயல்களையும் படம்பிடிக்க தொடங்கினார். நர்ஸ் ஊசிபோடும்போது பயத்தின் உச்சத்துக்கே சென்ற அவர், ஊசி போட்டவுடன் கீழே விழுந்து விடுகிறார். தடுப்பூசி மையத்தில் இருந்த அனைவரும் பதட்டமடைந்து அவருக்கு ஓடி வந்து உதவி செய்கின்றனர். ஆனால் அவரின் மனைவி, துளியும் பதட்டமடையாமல் அதனையும் வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த சம்பவம் பிரேசிலின் சா பாலோ நகரில் நடந்துள்ளது. பார்ப்பதற்கு நகைச்சுவையாக இருந்தாலும், இந்த வயதிலும் ஒருவருக்கு ஊசி என்றால் பயம் சூழ்ந்துக்கொள்கிறதே என்ற ஆச்சரியமும் தோன்றுகிறது. அந்தப் பகுதியைச் சேர்ந்த மாகுலா ஜூனியர், பீச் பாயிண்ட் கன்வென்சன் சென்டரில் நடந்த முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள சென்றபோதுதான், தன்னுடைய பயத்தை உலகறியச் செய்துள்ளார். அந்த வீடியோவில், தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் மையத்தில் மாகுலா ஜூனியர் நின்றுகொண்டிருக்கிறார். முன்னிருந்தவர் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் வரை பதட்டத்துடன் இருக்கும் அவர், தான் செல்ல வேண்டும் என்ற நிலை வந்தவுடன் பயம் மற்றும் பதட்டத்தின் உச்சிக்கே சென்று நடுங்குகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இருப்பினும், செவிலியர் ஒரு வழியாக சமாளித்து அவருக்கு தடுப்பூசி போடுகிறார். அப்போது, யாரும் எதிர்பார்க்காத வகையில் மாகுலா கீழே விழுகிறார். இதனால் பதட்டமடைந்த செவிலியர்கள், உடனடியாக அவருக்கு முதலுதவி அளிக்கின்றனர். தண்ணீர் கொடுத்த சிறிது நேரத்தில் அவருக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டவுடன், வீட்டுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டார். மாகுலாவின் செயல் குறித்து பேசிய அவரின் மனைவி, தனது கணவருக்கு ஊசி என்றாலே அதீத பயம் எனக் கூறியுள்ளார்.

ஊசி என்றாலே எப்போதும் இதைப்போலவே பயம் மற்றும் பதட்டத்துடன் இருப்பார் எனத் தெரிவித்த அவர், இந்த முறை அவரின் செயல்களை படம்பிடித்துவிட வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்ததாக கூறியுள்ளார். இதற்கு முன்பு அவர் இதுபோன்று பலமுறை நடந்து கொண்டிருப்பதாகவும், அதனால் தனக்கு எந்த பயமும் இல்லை எனத் தெரிவித்தார். ஊசி போட்டு சிறிது நேரத்தில் அவர் இயல்பு நிலைக்கு திரும்பி விடுவார் என்பது தனக்கு தெரியும் என்பதால், பதட்டமடையவில்லை என அவர் விளக்கியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைராகி வரும் நிலையில் பலரும் மாகுலாவின் மனைவியை திட்டி வருகின்றனர்.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

Source link

Leave a Reply

Your email address will not be published.