Health

Dating Is Very Stressful Says Priya Bhavani Shankar | இவருடன் டேட்டிங் செய்வது மிகவும் கடினம் – பிரியா பவானி ஷங்கர்

செய்தி வாசிப்பாளராக தனது பணியை ஆரம்பித்து, சின்னத்திரை தொடரின் மூலம் பலரது கவனத்தை ஈர்த்தவர் பிரியா பவானி ஷங்கர்.  அதனை தொடர்ந்து பட வாய்ப்பு கிடைத்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளும் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.  விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரின் மூலம் பல ரசிகர்களை பெற்றார், பின்னர் 2017ம் ஆண்டு ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான ‘மேயாத மான்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார், இதில் வைபவ்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.  அதனையடுத்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற பல படங்களில் கமிட்டானார்.

மேலும் படிக்க | ஏகே 62-ல் வில்லனாக நடிக்கிறேனா? விஜய்சேதுபதியின் பதில்

தற்போது இளைஞர்கள் மத்தியில் அதிக செல்வாக்கு பெற்று பிரபலமான நடிகையாக இருக்கும் பிரியா பவானி ஷங்கர் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பலரின் கேள்விகளுக்கும் பதிலளித்து வருகிறார்.  அன்றாடம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பலவிதமான புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார்.  நடிகர், நடிகைகள் பலரது ஸ்டேட்டஸ்கள் விரைவில் கவன ஈர்ப்பை பெற்று வைரலாகி விடும், அந்த வகையில் தற்போது பிரியா பவானி ஷங்கர் பதிவிட்டுள்ள இன்ஸ்டாகிராம் ஸ்டோரி ஒன்று வைரலாகியுள்ளது.

pbs

வளர்ந்து வரும் நாகரிக உலகில் தற்போது டேட்டிங், லிவிங் டுகெதர் போன்ற விஷயங்கள் சாதாரணமான ஒன்றாக மாறிவிட்டது.  இதனை பற்றி பலரும் எவ்வித தயக்கமும் இல்லாமல் பேச தொடங்கிவிட்டனர், பலரும் தங்களுக்கு பிடித்தமானவரை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள டேட்டிங் செய்து வருகின்றனர்.  தற்போது இந்த டேட்டிங் குறித்த ஒரு கருத்தை தான் பிரியா பவானி ஷங்கர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்துள்ளார்.  அவர் கூறுகையில், மெச்சூர்ட் ஆன நபருடன் டேட்டிங் செய்வது மன அழுத்தத்தை தரும்.  ஏதேனும் தவறு நடக்கும் பட்சத்தில் அந்த நபர் உடனடியாக மன்னிப்பு கேட்டுவிடுவார், அப்போது என்னுடைய கோவத்தை நான் எப்படி வெளிப்படுத்துவது என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க | 12 வருடங்களுக்கு பிறகு விஜய்யுடன் இணையும் பிரபல நடிகர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Source link

Leave a Reply

Your email address will not be published.