Tamil News

dindukkal double murder crime news | கொலை செய்தவரை கிராம மக்களே அடித்து கொன்ற கொடூரம்


திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே லிங்கவாடியைச் சேர்ந்தவர் தங்கராஜ். 41 வயதான இவர் டி.வி மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று தங்கராஜும் அதே பகுதியைச் சேர்ந்த 37 வயதான உதயகுமார் என்பவரும், ஊரின் மத்தியில் நின்று பேசி கொண்டிருந்தனர். அதில், இருவரும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போதுதான் அந்த பயங்கரம் அரங்கேறியது. குடும்பம் குழந்தைகள் என அமைதியான வாழ்க்கை வாழ்ந்தவர் தங்கராஜ். ஆனால் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையான உதயகுமாருக்கு, குடியை தவிர வேறு எந்த பொறுப்பும் இல்லை.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!   உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.  முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ரா

தினமும் கஞ்சா புகைத்துவிட்டு அக்கம் பக்கத்தினரிடம், அராஜகத்தில் ஈடுபவதை வழக்கமாக வைத்திருந்தார். அதில், அரங்கேறிய சம்பவத்தால் ஏற்கனவே உதயகுமார் மீது இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதற்கிடையேதான், ஏதோ ஒரு மர்ம காரணத்திற்காக இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. கஞ்சா போதையில் இருந்த உதயகுமாருக்கு அது ஆத்திரத்தை வரவழைத்தது. உடனே தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தங்கராஜை சரமாரியாக தலையில் வெட்டியிருக்கிறார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த தங்கராஜ், அங்கேயே துடித்துடித்து இறந்து போனார்.

திண்டுக்கல்,கஞ்சா போதை,கொலை,குற்றம், மெக்கானிக், கிராம மக்களே அடித்து கொன்ற,கிராம மக்களே அடித்து கொன்ற,கொலை செய்தவரை,அரிவளால் வெட்டி கொன்ற கொடூரம்,

அப்போது, யாரும் எதிர்பாராத இன்னொரு சம்பவமும் அரங்கேறியது. தங்கராஜின் உயிர் பிரிவதை நேரில்பார்த்த அவரது ஊர்க்காரர்கள், உதயகுமாரின் பக்கம் திரும்பினர். ரத்த கறையோடு அரிவாளுடன் நின்றிருந்தவரை, கூட்டமாக சேர்ந்து அடித்து உதைத்தனர். இதில் படுகாயமடைந்த உதயகுமார் அங்கேயே சுருண்டு விழுந்தார். இதனிடையே, தகவல் கிடைத்து அங்கு வந்த போலீசார், கொலை செய்யப்பட்ட தங்கராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் ஊர்க்காரர்கள் தாக்கியதில் படுகாயமடைந்த உதயகுமாரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் படிக்க | ரகசிய காதலனை வைத்து கணவரை கொன்று எரித்த மனைவி – நெல்லையில் பயங்கரம் !!

அங்கு தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட உதயகுமார், ஒரு மணி நேரத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை செய்த உதயகுமாரை தாக்கி கொன்ற ஊர்க்கார்கள், கைது செய்யப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.இந்நிலையில், திண்டுக்கலில் பட்டப்பகலில் அரங்கேறிய சம்பவத்தில் இரு உயிர்கள் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க | வாழ்ந்தா இப்படி வாழணும் – பட்டதாரி இளைஞரின் கொடைக்கானல் குடில்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

 

Source link

Leave a Reply

Your email address will not be published.