Tamil News

Idly Vada For Rupee 1 in Nallur Village Idly Shop | 1 ரூபாய்க்கு இட்லி வடை; பசியாற்றும் நல்லூர் கிராமத்தின் இட்லிக் கடை!


அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் கோயில் அருகே உள்ளது இளையபெருமாள் நல்லூர் கிராமம். இந்த கிராமத்தில் 1 ரூபாய் இட்லி கடை என்பது மிகவும் பெயர் போன இட்லி கடை. 3 தலைமுறையாக மிக குறைந்த விலையில் பொதுமக்களுக்கு இட்லி, வடை, டீ  விற்பனை செய்து வருகின்றனர். இதன் மூலம் காலையில் காடு கழனிக்கு வேலைக்கு செல்லும் பொதுமக்கள் முதல் பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் சுற்று கிராமங்களில் இருந்து வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் இந்த கடையை நாடி வருகின்றனர். 

கடைக்கு சென்று பையை பார்த்து உணவு அருந்தும் காலத்தில் வயிற்றை நிரப்பும் ஒரே கடை இந்த 1 ரூபாய் இட்லி கடைதான் என வெளியூரில் இருந்து உணவு அருந்த வந்தவர்கள் கூறுகின்றனர். வெங்காயம், தக்காளி விண்ணை தொடும் அளவிற்கு விலை உயர்ந்த போதிலும் ஒரு ரூபாயை தாண்டி விலையேற்றாமல் விற்பனை செய்யப்பட்டது. இட்லி, வடை. எந்தவித லாப நோக்கிடனும் இல்லாமல் வந்தவர்கள் வயிறார உண்ண வேண்டும் என்ற நோக்கில் மட்டுமே இந்த கடையை நடத்தி வருவதாகவும் எதற்காக அக்கம் பக்கத்தில் உள்ள கிராமங்களில் இருந்து தலைவரை தலைமுறையாக உணவருந்தி வருவதாகவும் கூறுகின்றனர்.

இதுகுறித்து அதே பகுதியைச் சேர்ந்த 80 வயதான கலியமூர்த்தி குருகையில் இவர்களது அப்பா காலத்தில்  காலணா அறையனா காசுகளுக்கு இட்லி விற்பனை செய்து வந்த காலத்தில் இருந்து இந்த கடையில் உணவருந்தி வருவதாகவும், தற்பொழுது ஏற்பட்டுள்ள விலை ஏற்றத்தினால் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்து வருகின்றனர். இருந்த பொழுதிலும் தரமான உணவுகளை தாமரை இலையில் வழங்குவது சிறப்பாக உள்ளது சுவையாகவும் உள்ளதாக கூறுகின்றார்.

மேலும் படிக்க | ஆ.ராசா மீது மதவாதிகள் தாக்குதல் நடத்தினால் பொறுக்கமாட்டோம் – சீமான் கொந்தளிப்பு

இதுகுறித்து கடையை நிர்வகித்து வரும் ஆட்சி ராதா கூறுகையில் நான் 13 வயதில் திருமணம் செய்து கொண்டு வந்தேன். தற்போது 62 வயது ஆகிறது இதுவரை இந்த வேலையை தான் விடாமல் செய்து வருகிறோம். இந்தக் கடையை எந்தவித லாப நோக்கிடனும் தாங்கள் நடத்தவில்லை என்றும் இதன் மூலம் எங்களுக்கு எந்த லாபமும் கிடையாது. எனது மாமனார் கட்டி வைத்த வீடுகளில் மட்டுமே நாங்கள் வசித்து வருகிறோம் ஒரு சிறிய ஓட்டு கட்டிடத்தில் மின்சாரம் கூட இல்லாத நிலையில், அதில் டீக்கடை வைத்து இட்லி வடை விற்பனை செய்து வருகிறோம் தற்பொழுது உளுந்து 150 ரூபாய் கிலோ விற்பனையாகும் நிலையில், அதை கழுவி கழுவி கைகள் புண்ணாகி போனதை தவிர வேறு பயனில்லை

ஒரு நாள் ஒன்றுக்கு ஜெயங்கொண்டம் ஆண்டிமடம் மீன்சுருட்டி மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 200க்கும் மேற்பட்ட நபர்கள் எங்கள் கடையில் இட்லி உண்ண வேண்டும் என்பதற்காக வருகை புரிகின்றனர். அவர்கள் ஏமாந்து விடக்கூடாது என்பதற்காகவும் சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் பள்ளி மாணவர்கள் ஆட்சி கடைக்கு சென்றால் வயிறார வடை உண்ணலாம் என்று எண்ணி ஆர்வத்துடன் வந்து வடையை வாங்கி உண்டு களித்து அவர்கள் காட்டும் அன்பும் அரவணைப்பும் போதும் என்று கூறுகின்றார்.

மேலும் படிக்க | புதிய பாராளுமன்ற கட்டடத்திற்கு அம்பேத்கர் பெயர் வைக்க கோரும் சீமான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

Leave a Reply

Your email address will not be published.