Health

Is That Suriya Character In Siruthai Siva Directional Suriya42 Movie | சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் இதுதானா

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான சூர்யாவின் நடிப்பில் சமீபகாலமாக வெளிவந்த படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.  சமீபத்தில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்ற இந்த நடிகர் தற்போது பல படங்களில் பிசியாக நடித்துக்கொண்டு இருக்கிறார்.  சூர்யா இப்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார், இந்த படத்திற்கு தற்காலிகமாக ‘சூர்யா 42’ என்று பெயரிடப்பட்டு இருக்கிறது, மேலும் இந்த படத்தின் பிரம்மாண்டமான மோஷன் போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டு இருக்கின்றது.  இந்நிலையில் ‘சூர்யா 42’ படம் ஒரு பிரபலமான சக்திவாய்ந்த தமிழ் ஆட்சியாளரின் கதையை அடிப்படியாக கொண்டது என்று சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

சங்க காலத்தில் பிரபலமாக இருந்த வேள்பாரியை பற்றி தான் இப்படம் உருவாக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது, பண்டைய தமிழகத்தின் பறம்புநாடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை ஆண்டவர் தான் வேள்பாரி, இவர் வேடர் வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார்.  ‘சூர்யா 42’ படத்தில் வேள்பாரி கதாபாத்திரத்தில் தான் சூர்யா நடிக்கிறார் என்று கூறப்படுகிறது, மேலும் வேள்பாரி பிரபல கவிஞர் கபிலரின் நண்பராவார்.  இயற்கை வளங்களை காப்பாற்ற வேள்பாரி மிகவும் போராடினார், மேற்குத்தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான பறம்புமலையின் எஜமானராக இருந்து 300 கிராமங்களுக்கு மேல் ஆட்சி செய்து தனது ஆட்சிக்காலம் முழுவதும் அந்த இடங்களை செழிப்பாக வைத்திருந்தவர் வேள்பாரி.  

suriya

மேலும் படிக்க | ஆந்திரா, தெலுங்கானாவில்  ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட ‘3’ திரைப்படம்: தூள் கிளப்பும் வசூல்!!

பாரி தமிழ்நாட்டின் கோபிசெட்டிபாளையத்திற்கு அருகில் பாரியூர் அல்லது பரபுரி என்ற இடத்தை பாரியின் பெயரால் ஆட்சி செய்தார்.  போரில் பாரி தோற்கடிக்கப்பட்ட பிறகு, கி.பி.பதின்மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் மக்கள் மற்ற இடங்களுக்கு குடிபெயர தொடங்கிவிட்டனர். இதனால் செழிப்பாக இருந்த இந்த இடமே மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.  இந்த இடம் தான் தற்போது தமிழ்நாட்டில் பரவலாக அறியப்படும் கோபிச்செட்டிபாளையமாக உள்ளது.  

‘சூர்யா 42’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடிக்கவுள்ளார், மேலும் இந்த படத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா மற்றும் ஆனந்த் ராஹ் போன்ற நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.  பிரம்மாண்ட பொருட்செலவையில் உருவாகப்போகும் இந்த படம் கிட்டத்தட்ட 10 மொழிகளில் உலகெங்கும் திரையிடப்படும் என்று கூறப்படுகிறது.  பான்-இந்தியா திரைப்படமாக உருவாகும் இந்த படத்தை யூவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க, படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

 

மேலும் படிக்க | பொன்னியின் செல்வன் படத்தில் விஜய், மகேஷ் பாபு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Source link

Leave a Reply

Your email address will not be published.