Health

Kamal Rajini starring aval appadithan film to be remade after 44 years | 44 ஆண்டுகளுக்கு பிறகு ரீமேக் ஆகும் கமல்-ரஜினியின் படம்

தமிழ் சினிமாவில் உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு இன்றளவு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது.  அன்றிலிருந்து இன்றுவரை இருவரின் படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பு குறைந்தபாடில்லை, இந்த இரு பெரிய நட்சத்திரங்களின் படங்கள் வெளியாகும்போதும் திரையரங்குகள் விழாக்கோலமாக காட்சியளிக்கும்.  கமல்-ரஜினி இருவரும் தற்போது தனித்தனியாக தான் நடித்து வருகின்றனர், ஆனால் ஆரம்ப காலகட்டத்தில் இந்த இருவரும் இணைந்து இருபதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளனர்.  ஆக்ஷன் கதையம்சம் கொண்ட திரைப்படங்கள் மட்டுமல்லாது குடும்பங்கள் கொண்டாடும் வகையிலான பொழுதுபோக்கான படங்கள் மற்றும் பெண்களை மையப்படுத்திய படங்கள் போன்றவற்றிலும் இந்த இரண்டு பெரிய நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

aval appadithan

மேலும் படிக்க | பொன்னியின் செல்வனை இவ்வளவு நாள் எடுக்காமல் இருந்தது நல்லதுதான் – மணிரத்னம்

கமல் மற்றும் ரஜினியின் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற சிறந்த படங்களில் ஒன்றுதான் ‘அவள் அப்படித்தான்’, இப்படம் 1978ம் ஆண்டு வெளியானது.  சி.ருத்ரய்யா இயக்கத்தில் உருவான இந்த படத்தின் இன்றுவரை தமிழ் சினிமாவின் சிறந்த படங்களுள் ஒன்றாக கருதப்படுகிறது.  ஆணாதிக்க சமூகத்தில் சிக்கி கடுமையான இன்னல்களை சந்தித்து அதிலிருந்து சுதந்திரம் பெற போராடும் ஒரு இளம்பெண்ணின் கதை தான் இந்த அவள் அப்படித்தான் படம்.  இப்படத்தில் ஆணாதிக்க சமூகத்திலிருந்து விடுதலை பெற போராடும் பெண்ணாக ஸ்ரீப்ரியா நடித்திருந்தார், ஆணாதிக்கவாதியாக ரஜினியும், முற்போக்கு சிந்தனை கொண்ட இளைஞனாக கமல்ஹாசனும் நடித்திருந்தனர்.

aval appadithan

‘பானா காத்தாடி’ படத்தின் மூலம் பிரபலமான பத்ரி வெங்கடேஷ் கடந்த மே, 2020ல் ‘அவள் அப்படித்தான்’ படத்தை ரீமேக் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில், படத்தின் உரிமையை பெறுவதற்கு முன்னரே அவள் அப்படித்தான் படத்தின் இயக்குனர் இறந்துவிட்டார்.  தற்போது இயக்குனர் பத்ரி மீண்டும் இந்த படத்தை இயக்கப்போவதாக கூறியுள்ளார் என்றும் அந்த படத்தில் ஸ்ரீப்ரியா கதாபாத்திரத்தில் ஸ்ருதிஹாசனையும், கமல் மற்றும் ரஜினி கதாபாத்திரத்தில் சிம்பு மற்றும் பஹத் பாசிலை நடிக்கவைக்க திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க | வெந்து தணிந்தது காடு படத்தின் முதல் இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

Leave a Reply

Your email address will not be published.