Health

KGF 2 Movie Crosses 100 Days in Theaters | கேஜிஎப் 2 செய்த மற்றொரு சாதனை! கெத்து காட்டும் யாஷ்

பிரசாந்த் நீல் இயக்கத்தில், ஆக்ஷன் நாயகன் யாஷ் நடித்த கேஜிஎப் 2 பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே ரிலீஸானது. முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, பிரம்மாண்டத்தின் உட்சமாக இருந்ததால் 2 பாகம் எப்படி இருக்கும்? என்ற பெரும் வியப்புகளுக்கு இடையே வெளியானது. தமிழகத்தில் பீஸ்ட் ரிலீஸூக்கு ஒருநாள் பின்னர் கேஜிஎப் ரிலீஸானது. எதிர்பார்ப்புகளை நிஜமாக்கும் வகையில் படம் இருந்ததால், ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். ஆக்ஷன், சென்டிமெண்ட் என ஒவ்வொரு சீனும் ரசிகர்களை நேரடியாக கனெக்ட் செய்யும் வகையில் பிரசாந்த் நீல் காட்சிப்படுத்தியிருந்தார். ஏற்றுக் கொள்ளமுடியாத, நம்புவதற்கு அப்பாற்பட்ட சில விஷயங்கள் மற்றும் காட்சிகள் படத்தில் இடம் பெற்றிருந்தாலும், அவையெல்லாம் ஒரு பொருட்டாக ரசிகர்கள் கருதவில்லை.

இதனால் அலைஅலையாக மக்கள் தியேட்டர்களுக்கு சென்று கேஜிஎப் 2 படத்தை பார்த்தனர். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என வெளியிடப்பட்ட அனைத்து மொழிகளிலும் பாக்ஸ் ஆஃபீஸ் வசூலை வாரிக் குவித்தது. இதற்கு முன்னதாக ரிலீஸான ராஜமௌலியின் பிரம்மாண்ட படைப்பான ஆர்ஆர்ஆர் வசூல் சாம்ராஜ்ஜியத்தை நிகழ்த்தி ஆயிரம் கோடி ரூபாய் பாக்ஸ் ஆஃபீஸில் இணைந்த நிலையில், அதற்கு இணையாக வசூலை வாரிக் கட்டியது கேஜிஎப் 2. இந்தியில் அதிக வசூலைக் குவித்த படமாகவும் மாறியது. இந்த ஆண்டில் இந்திய சினிமாவில் ஆயிரம் கோடி ரூபாய் வசூலைக் குவித்த படங்கள் என்றால், அவை கேஜிஎப் 2 மற்றும் ஆர்ஆர்ஆர் என்ற இரண்டே இரண்டு மட்டும் தான்.

மேலும் படிக்க | ரன்வீர் சிங் போட்ட வழியில் இப்போது விஷ்ணு விஷால் – வைரலாகும் போஸ்

ஏற்கனவே பல சாதனைகளை இரு படங்களும் நொறுக்கிவிட்டு, தங்களுக்குள் போட்டிப் போட்டுக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது புதிய சாதனையை படைத்திருக்கிறது கேஜிஎப் 2. ஒரு சில வாரங்கள் ஓடினாலே வெற்றிப் படம் என கூறப்படும் இப்போதைய சூழலில், கேஜிஎப் 2 திரைப்படம் 100 நாட்கள் தியேட்டர்களில் ஓடி சாதனை படைத்திருக்கிறது. இயக்குநர் பிரசாந்த் நீல், இந்த மகிழ்ச்சியை வீடியோவுடன் டிவிட்டரில் பகிர்ந்திருக்கிறார். ரசிகர்கள் உள்ளிட்ட ஆதரவளித்த அனைவருக்கும் தன்னுடைய நன்றிகளை தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | அஜித் தரிசனம்… கோயிலில் காத்திருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Source link

Leave a Reply

Your email address will not be published.