Tamil Entrepreneurs

Lightning struck the person inside the house – England’s ‘Lightning Murali’ | வீட்டுக்குள் இருந்தவரை தாக்கிய மின்னல்


மின்னல் தாக்கி சூப்பர் ஹீரோ ஆனவர்களின் கதைகளை படித்து இருக்கிறோம், திரைப்படங்களில் பார்த்து ரசித்திருக்கிறோம். சமீபத்தில் கூட, மின்னல் முரளி என்ற திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆனது. மின்னல் தாக்குதலால் ஃபேன்டசி உலகில் தான் சூப்பர் பவர் எல்லாம் கிடைக்கும். ஆனால் நிஜ உலகில் ஒரு நபர் மின்னல் தாக்குதலுக்கு உட்பட்டால் அவர் இறந்து போகும் ஆபத்து கூட இருக்கிறது.

இந்நிலையில் வீட்டுக்குள்ளே விளையாடிக் கொண்டிருந்த ஒரு நபரை மின்னல் தாக்கி இருக்கிறது. அதை பற்றி அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த செய்தி வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இந்த மின்னல் முரளிக்கு மின்னல் தாக்கியதால் என்ன நடந்தது என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

யூகேவில் உள்ள ஆக்ஸ்போர்ட்ஷைரைச் சேர்ந்தவர் ஐடன் ரோவன். இவருக்கு 33 வயதாகிறது. இவர் தன்னுடைய வீட்டில் வரவேற்பரையில் பிளே ஸ்டேஷனில் கேம்ஸ் விளையாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது இவர் மின்னலால் தாக்கப்பட்டிருக்கிறார். வீட்டுக்குள் அமர்ந்து விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு நபர் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார் என்று கேட்கும் பொழுது கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது.

Read More: உலகிலேயே உயரமான செனாப் பாலம்.. கண் கவரும் போட்டோக்களை பகிர்ந்த இந்திய ரயில்வே.! 

ஐடன் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது மிகப்பெரிய சத்தத்துடன் இடி இடித்து மின்னல் மின்னியது. அதன் பிறகு அசவுகரியமாக உணர்ந்ததாகவும், வலது கையில் திடீரென்று எரிச்சலும் வெப்பமும் அதிகரித்ததாகவும் கூறியிருக்கிறார். சில நொடிகளில் கைகளில் தீக்காயம் போன்ற காயங்கள் ஏற்பட்டு உள்ளது என்று தெரிவித்திருந்தார். என்ன நடந்தது என்பதை புரிந்து கொள்வதற்கு ஐடனுக்கு ஒரு சில நிமிடங்கள் ஆனது. வலது கை எரிவது போன்ற ஒரு உணர்வு மற்றும் கையில் காயங்கள் ஆகியவற்றைப் பார்த்து உடனடியாக தன்னுடைய பார்ட்னர் ஆன, ஆரோனுக்கு தெரிவித்திருக்கிறார்.

உடனடியாக ஆரோன், ஐடனின் பெற்றோர்களுக்கு அழைத்து அவர்களை மருத்துவமனைக்கு வர சொல்லியிருக்கிறார். ஐடனையும் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார். நடந்த சம்பவத்தை பற்றி விவரித்த பிறகு கிட்டத்தட்ட பல மணி நேரங்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்துள்ளார். வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த 9 மருத்துவர்கள் பரிசோதனை செய்து வந்துள்ளனர். அதன் பிறகு ஐடனின் இடதுகையில் பலவிதமான தழும்புகள் காணப்பட்டுள்ளன. மருத்துவர்கள், ஐடனை மின்னல் தாக்கியுள்ளது என்று உறுதிப்படுத்தியுள்ளனர்.

மருத்துவமைனையில் சிகிச்சை பெற்று வரும் ஐடனின் புகைப்படம் இங்கே.

 

இந்த புகைப்படத்தை ஐடனே பகிர்ந்துள்ளார். அதில், ‘மற்றவர்கள் என் மீது பரிதாப பட வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த புகைப்படத்தை நான் பகிரவில்லை. திறந்திருந்த ஜன்னல் வழியாக என்னை மின்னல் தாக்கியது என்ற அதிர்ச்சியூட்டும் ஒரு செய்தியை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.

இனி இடி மின்னல் அடிக்கும் போது, விளையாடப் போவதில்லை. மின்னல் தாக்கியதால் சோர்வாகவும், காயம் மிகவும் எரிச்சலூட்டுவதாகவும் இருக்கிறது’ என்று தெரிவித்தார்.

 

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.





Source link

Leave a Reply

Your email address will not be published.