Health

Lingusamy Talks About Vimal In Thudikkum Karangal Teaser Launch | சிவகார்த்திகேயன் போல் வந்திருக்க வேண்டியவர் அவர் – லிங்குசாமி ஓபன் டாக்

நடிகர் விமல் ஆரம்பத்தில் கில்லி, கிரீடம் உள்ளிட்ட படங்களில் துணை கதாபாத்திரங்களில் தலை காண்பித்தவர். அதன் பிறகு பசங்க படம் மூலம் ஹீரோவான விமலுக்கு களவாணி படம் மிகப்பெரிய ப்ரேக் கொடுத்தது. இதனால் கோலிவுட்டில் பெரிய ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு பிறகு அவர் நடித்த பெரும்பாலான படங்கள் சரியாக போகவில்லை. ஆனாலும் வாகை சூட வா, மஞ்சப்பை போன்ற சிறந்த கதையம்சம் உள்ள படங்களில் ஹீரோவாக நடித்தார். கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் இவருடன் சிவகார்த்திகேயன் இணைந்து நடித்தார். குறிப்பாக அந்தப் படம் வெளியானபோது எஸ்கேவைவிட விமல்தான் பிரபலம். இருப்பினும் அவர் தேர்ந்தெடுத்த மற்ற கதைகள் சொதப்பியதால் ஒருகட்டத்தில் காணாமல்போனார். 

இந்தச் சூழலில் சமீபத்தில் அவர் நடித்த விலங்கு வெப் சீரிஸ் வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து மீண்டும் பிஸியாகியிருக்கிறார் விமல். அந்தவகையில் அவர் தற்போது கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘துடிக்கும் கரங்கள்’. இந்தப்படத்தை வேலுதாஸ் இயக்க, ஒடியன் டாக்கீஸ் சார்பில் கே.அண்ணாதுரை, வேலுதாஸ் மற்றும் காளிதாஸ் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தில் மிஷா நரங் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பிற பணிகள் நடைபெற்றுவருகின்றன. இந்தப் படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட இயக்குநர் லிங்குசாமி பேசுகையில், “ சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த படத்தின் டைட்டிலை இந்தப் படத்திற்கு வைத்துள்ளார்கள். அவரது படங்களில் கொஞ்சம் சுமாராக ஓடிய படங்களின் டைட்டிலை மீண்டும் பயன்படுத்தும்போது சென்டிமென்டாக அந்த படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளன. நான் மகான் அல்ல திரைப்படம் அதற்கு ஒரு உதாரணம், அதுபோன்ற ஒரு வெற்றியை இந்தப் படம் நிச்சயம் பெறும்.

Thudikkum Karangal

நடிகர் விமல் கேடி பில்லா கில்லாடி ரங்கா, மஞ்சப்பை என நல்ல படங்களில் நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் மாதிரி ஒரு இடத்திற்கு அவர் இந்நேரம் வந்திருக்க வேண்டியவர். இடையில் ஏதோ சில தவறுகளால் அதில் கொஞ்சம் தடை ஏற்பட்டு விட்டது. இப்போது சின்னப்படங்கள் என்று சொல்லப்படக்கூடிய லவ்டுடே போன்றவை ரிலீசுக்குப் பின் ரசிகர்கள் ஆதரவுடன் வெற்றிபெற்று பெரிய படமாக மாறுகின்றன. இந்த படத்தின் டீசரை பார்த்தபோது எதுவுமே தப்பாக தெரியவில்லை. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும்.

ஆந்திராவில் பண்டிகை காலங்களில் தமிழ் படங்களை திரையிடக்கூடாது என தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்திருப்பது தவறானது. இப்போது வெளியாகும் படங்கள் எல்லாம் நன்றாக ஓடுகின்றன. இது சினிமாவிற்கு ஒரு பொற்காலம். இந்த சமயத்தில் இப்படி ஒரு பிரச்னை வரவே கூடாது. வாரிசு ரிலீஸ் விஷயத்தில் சரியான ஆட்கள் பேசி இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும். 

மேலும் படிக்க | வாரிசை வாங்கிவிட்டாரா உதயநிதி?… விஜய்யின் சூப்பர் மூவ்

குறுகிய எண்ணத்தோடு யாராவது இப்படி ஒரு முடிவெடுத்து இருந்தால், நிச்சயமாக வாரிசுக்கு முன், வாரிசுக்கு பின் என சினிமாவும் மாறிவிடும். அதனால் இப்போது ஏற்பட்டிருப்பது ஒரு சின்ன சலசலப்புதான். இது விரைவில் சரியாகிவிடும் என நம்புகிறேன்” என்றார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Source link

Leave a Reply

Your email address will not be published.