தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக் குழு ஒருவரைக் காயத்துடனும், மேலும் நான்கு மணி நேரம் போராடி 43 அடி ஆழத்தில் இன்னொருவரை உயிரிழந்த நிலையிலும் மீட்டனர்.
“One man has been injured and another is missing after a sinkhole opened up in a inground pool at a home in central Israel.
The incident occurred during a pool party.” pic.twitter.com/S9cByAFebx— natureismetal (@NIMactual) July 21, 2022
இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது. இறந்த நபர் அந்த நிறுவனத்தில் வேலைசெய்யும் ஊழியர் 32 வயதான கிளில் கிம்ஹி என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். காயங்களுடன் மீட்கப்பட்ட இன்னொரு நபர் தற்போது சிகிச்சை பெற்றுவருகிறார்.
בולען נפער בבריכה בבית פרטי בכרמי יוסף, אדם נעדר@daniel_elazar pic.twitter.com/8YiT1g2rdT
— כאן חדשות (@kann_news) July 21, 2022
இந்த சம்பவம் தொடர்பான அந்த காணொளி தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. அதில், நீச்சல் குளத்தில் ஏற்பட்ட துளையில் நீர்க் கீழே செல்வதைப் பார்க்கமுடிகிறது. மேலும் நின்று கொண்டிருந்த ஒருவர் குழியில் விழச் சற்றே தப்பியதும் தெரிகிறது.
மேலும், அந்த நீச்சல் குளத்தில் மிதந்த பொம்மைகள் அந்த பள்ளத்திற்குள் செல்கின்றன. இந்த காட்சி சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது. கொண்டாட்டத்திற்காகச் சென்ற இடத்தில் நடத்தச் சம்பவம் அங்கு வந்த அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.