Health

Meenakshi Ponnunga Serial Episode Update On 27th May

ஜீ தமிழ் தொலைக்காட்சியின் பிரபலமான தொடர்களுள் ஒன்றாக விளங்கும் நாடகம், மீனாட்சி பொண்ணுங்க. மக்களின் மனங்களில் நல்ல இடத்தை இந்த தொடர் தக்கவைத்துள்ளது. பெண்கள் மட்டுமே நிறைந்த குடும்பத்தையும் அவர்களின் வாழ்க்கையையும் சுற்றி நடக்கும் கதைதான் இந்த தொடரின் மையக்கரு. தமிழ் ரசிகர்கள் பலரது மனங்களில் இடத்தை பிடித்த மீனாட்சி பொண்ணுங்க சீரியல் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. ரசிகர்களின் விருப்பமான தொடர்களுள் இன்றாக இருக்கும் இந்த சீரியலில் இன்று என்னென்ன விஷயங்கள் என்னென்ன தெரியுமா? 

முந்தைய எபிசோட்:

வெற்றி சக்தியை தன் காலில் விழச் சொல்கிறான். யமுனா துர்காவும் சக்தியிடம் வெற்றியிடம் மன்னிப்பு கேள் என்று சொல்கிறார்கள். சக்தி வெற்றியிடம் எனக்கும் ஒரு காலம் வரும் என்று சொல்கிறாள். இரவில் சாந்தா மீனாட்சிக்கு போன் செய்ய மீனாட்சி போனில் பேசுகிறாள். அப்போது கூடிய விரைவில் வருகிறேன் என்று பேசும்பொழுது ஒரு பெட்ரோல் பாம் போன் பூத்தின் மேல் விழ போன் பூத் பற்றி எரிகிறது.

புஷ்பாவும் சங்கிலியும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வர ஏற்கனவே வெற்றியால் அவமானப்பட்ட ஒரு இன்ஸ்பெக்டர் மாற்றல் ஆகி அந்த ஸ்டேஷனுக்கு வர புஷ்பா இன்ஸ்பெக்டரிடம் சென்று பேசி வெற்றியை எப்படியாவது கைது செய்யுங்கள் என்று லஞ்சம் கொடுக்கிறாள். வெற்றி கைது செய்யப்பட்டானா? புஷ்பா தனது சவாலை பூர்த்தி செய்தாளா? இது போன்ற பல கேள்விகளுக்கு இன்றைய எபிசோடில் விடை இருக்கிறது. 

மேலும் படிக்க | கவர்ச்சிக்கன்னி! கதாநாயகி! அன்பான அம்மாக்கள்… நாயகிகளின் அழகிய வாழ்க்கை பரிமாற்றம்

இன்றைய எபிசோட்:

மீனாட்சி பொண்ணுங்க சீரியலின் இன்றைய எபிசோடில் புஷ்பாவும் சங்கிலியும் இன்ஸ்பெக்டரை சந்தித்து வெற்றி மீது கம்ப்ளைன்ட் கொடுத்ததோடு லஞ்சம் கொடுத்து கைது செய்ய சொன்ன நிலையில் இன்ஸ்பெக்டர் வெற்றியை கைது செய்ய முடிவெடுக்கிறார். வெற்றி, கிரி, திடியன் மூவரும் ஷார்ட்ஸ் போட்டுக்கொண்டு வீட்டில் எக்ஸர்சைஸ் செய்து கொண்டிருக்கும்போது போலீஸ் வந்து வெற்றியை கைது செய்கிறது. சக்தி தான் ஏற்கனவே கொடுத்த கம்ப்ளைன்டில் தான் வெற்றியை கைது செய்கிறீர்களா என கேட்டுவிட்டு தடுக்காமல் விட்டு விடுகிறாள். 

வெற்றி, திடியன், கிரியும் போலீஸ் ஸ்டேஷனில் இருக்க, சக்தி எப்படியும் வந்து தன்னை காப்பாற்ற வருவாள் என்று வெற்றி சொல்லிக் கொண்டிருக்கும்போது சக்தி போலீஸ் ஸ்டேஷனுக்கு வருகிறாள். இன்ஸ்பெக்டரிடம். ஐ பி சி செக்சன் எல்லாம் கேட்டு விசாரிக்கிறாள். பின் செக்ஷன் எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது என்று சொல்லுகிறாள் .தன்னை வெளியில் எடுத்து விடுவாள் என நினைத்த வெற்றி கடுப்பாகிறான். 

பின் சக்தி வெற்றிடம் உனக்கு ஒரு மானப் பிரச்சனை என்றால் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டேன் என்று கூறி அவள் கொண்டு வந்த வேட்டி சட்டையை கொடுக்கிறாள், கர்சிப்பை கீழே போடுகிறேன் எடுப்பது போல் என் காலில் விழுந்து மன்னிப்பு கேள் என்று சக்தி சொல்ல வெற்றி மன்னிப்பு கேட்க மறுக்கிறான். 

காணத்தவறாதீர்கள்..

மீனாட்சி பொண்ணுங்க தொடர் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய இந்த சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9:30 மணிக்கு காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | ‘ராகவன் மீண்டும் வறார்’ ரீ-ரிலிஸ் ஆகிறது கமலின் வேட்டையாடு விளையாடு படம்-எப்போது தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments