பெண்களின் உடலில் (ஆண்களுக்கான ஹார்மோன்) testosterone என்னும் ஹார்மோன் அதிகமாக சுரக்கும் போது முகத்தில் தேவையற்ற முடி வளர்வது 10ல் ஒரு பெண்ணுக்காவது ஏற்படுகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பெரும்பாலும் மேல் உதட்டிற்கு மேல் மீசைப்போன்று வளரும் முடியை அவ்வப்போது பெண்கள் அகற்றுவது வழக்கமான ஒன்று தான். ஆனால் கேரளாவை சேர்ந்த ஷைஜா மேல் உதட்டிற்கு மேலே உள்ள முடியை நீக்கி கொள்வதில்லை. குறிப்பாக தனது புருவமுடியை திரெடிங் செய்வதற்கு பியூட்டி பார்லருக்கு சென்றாலும் ஒருபோதும் முகத்தில் உள்ள முடியை நீக்கிக்கொள்ள நினைத்ததே இல்லையாம்.. இந்த சூழலில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னதாக ஷைஜாவின் முகத்தில் திடீரென அடர்த்தியான மீசை வளர தொடங்கியுள்ளது.
ஆனால் இதை பற்றி கொஞ்சம் கூட அவர் கவலைப்பட்டதே இல்லையாம்.. இது போன்ற தோற்றத்தில் உள்ளது குறித்து பல கேலிகள் வந்தாலும் சற்றும் கண்டுக்கொள்ளாமல் முறுக்கு மீசையோடு வலம் வரும் ஷைஜா பேசுகையில், எனக்கு வளர்ந்துள்ள மீசை ரொம்ப பிடித்துள்ளது என மகிழ்ச்சியுடன் பகிர்கிறார். மேலும் இப்படி மீசை வளர்ந்துவிட்டதே என நினைத்து ஒருபோதும் நான் கஷ்டப்பட்டது இல்லை எனவும் மீசை இல்லாமல் என்னால் இருக்கவே முடியாத மனநிலைக்கு வந்துவிட்டதாக கூறுகிறார்.
குறிப்பாக கொரோனா தொற்றுக்காலக்கட்டத்தில் கூட மாஸ்க் அணிந்தால் என்னோட மீசை மறைத்துவிடுமே என்பதற்காக அதனை வெறுத்ததாகவும் கூறுகிறார். மேலும் முறுக்கு மீசையோடு இருக்கும் புகைப்படத்தை வாட்ஸ்அப் ப்ரொபைல் மற்றும் ஸ்டேடஸில் வைக்கும் போதெல்லாம் மீசை அகற்றுவதற்கு பலர் அறிவுரை கூறுவார்கள். பலர் கேலி செய்வார்கள். ஆனால் அதில் எனக்கு எந்த விருப்பமும் இல்லை. இப்படி மீசையோடு இருப்பதற்குக் கணவர், குழந்தை உள்பட குடும்பத்தினர் அனைவரும் சப்போட்டாக இருப்பதால் மற்றவர்களைப்பற்றி நான் கவலை கொள்ள தேவையில்லை என்கிறார் ஷைஜா.
Also Read : மெட்ரோ ரயிலுக்குள் ‘ரீல்ஸ்’ ஷீட்.. சிக்கலில் சிக்கிய இளம்பெண்..
இப்படி ஹார்மோன் பிரச்சனைகயால் ஏற்பட்ட அதீத முடிவளர்ச்சியை கண்டு கவலைப்படமால் இது தான் என்னோட தனித்துவம் என்ற மனநிலைக்கு வந்துவிட்டார் ஷைஜா. ஆண்களுக்கு மட்டும் தான் மீசை இருக்க வேண்டும் என்ற விதிகளையெல்லாம் புறம்தள்ளி பெண்களும் மீசை வைத்தால் என்ன தவறு? என்ற கேள்விகளோடு முறுக்கு மீசையை முறுக்கிக்கொண்டு பெருமைக்கொள்கிறார் இந்த ஷைஜா என்றே கூறலாம். பெண்கள் என்ன செய்தாலும் அவர்கள் விருப்பப்படி செய்தால் எல்லாமே அழகு தான் என்ற மனநிலையை மக்கள் ஏற்படுத்தி பெருமைக்குரியவராகவும் உள்ளார் இந்த கேரளத்துப்பெண்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.