Health

Music Director D Imman Gets Married Again After His Divorce | இசையமைப்பாளர் டி.இமானுக்கு டும் டும் டும் பொண்ணு யாரு தெரியுமா

தமிழின் முன்னணி இசையமைப்பாளரான டி.இமானுக்கு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. மிக குறுகிய வட்டத்துடன் நடந்த திருமணத்தின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ள நிலையில் திரைத்துறையினரும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

விஸ்வாசம், அண்ணாத்த என்று தமிழின் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருபவர் டி.இமான். இவர் இசையமைத்தால் அனைத்து பாடல்களும் மிகப்பெரிய வெற்றி பெறும் என்பது தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களின் கணக்கு. ஆனால் அதையே குறைந்த பட்ஜெட்டில் திறம்பட செய்துவந்தவர் டி.இமான்.

மேலும் படிக்க | நடிகர் விக்ரம் இனிமேல் படங்களில் நடிக்கமாட்டாரா?

தன்னுடைய 13 ஆண்டுகால திருமண வாழ்வை முடித்துக் கொள்ளப் போவதாக டி.இமான் 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிவித்தார். முதல் மனைவியான மோனிகா ரிச்சர்டுக்கும் இமானுக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர். பிளெசிகா, வெரோனிகா என்ற பெயர் கொண்ட மகள்கள் தங்களது பெற்றோரின் முடிவை ஏற்றுக் கொண்டனர். இதனால் பரஸ்பர புரிந்துணர்வில் இருவரும் பிரிந்தனர்.

அதன்பின் பேட்டியளித்த டி.இமான் தன்னுடைய தந்தை தான் மறுமணம் செய்வதை விரும்புவதாக கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது மிக நெருங்கிய நண்பர்கள் வட்டத்திற்கு மட்டும் அறிவித்து திருமணம் செய்திருக்கிறார் டி.இமான். எமிலி என்ற பெயர் கொண்ட பெண்ணை கரம் பிடித்திருக்கும் இமானின் படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றன.

மேலும் படிக்க | உண்மையான குடும்பங்கள் கொண்டாடும் படமாக உருவாகும் ‘தளபதி 66’!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Source link

Leave a Reply

Your email address will not be published.