Tamil Entrepreneurs

Nepal girl child danced beautifully to Rashmika Mandhana’s song “Sammy Sammy” went viral


ராஷ்மிகா மந்தனா நடித்து நடனமாடிய பாடலின் வரும் அதே நடன அசைவுகளைக் கச்சிதமாக ஆடிய பள்ளிச் சிறுமியின் வீடியோ டிவிட்டரில் வைரலானதை தொடர்ந்து அந்த சிறுமியைச் சந்திக்க விரும்புவதாக  ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு வரை சமூக வலைத்தளம் எங்கும் மிகவும் பிரபலமாக இருந்த பாடல் தான் ராஷ்மிகா மந்தனா ஆடிய “சாமி சாமி” பாடல். புஷ்பா என்னும் தெலுங்கு ஆக்ஷன் படத்தில் இடம்பெற்ற இந்த பாடல் முதன் முதலில் அறிமுகமான போதே பலர் ராஷ்மிகா மந்தனாவின் இந்த நடன அசைவுகளினால் மிகவும் கவரப்பட்டு இன்ஸ்டாகிராம் பேஸ்புக் எனப் பல சமூக வலைத்தளங்களிலும் தாங்களும் அதே போன்று அந்தப் பாடலுக்கு நடனமாடி தங்களது வீடியோக்களை பதிவேற்றம் செய்திருந்தனர்.

இதன் மூலம் முக்கியமாகப் பல திரைத்துறை நட்சத்திரங்களும் வேறு பல துறையைச் சார்ந்த நட்சத்திரங்களும் கூட இந்த பாடலுக்கு நடனமாடி தங்களது வீடியோக்களை வெளியிட்டு மகிழ்ந்தனர். அதற்கேற்றவாறு அந்த திரைப்படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று வசூலை அள்ளியது.

அந்த வகையில் தற்போது நடிகை ராஸ்மிகா மந்தனா தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்து உள்ளார் அதில் நேபாள நாட்டுச் சிறுமி ஒருவர் சுட்டித்தனமாக நடமாடி இருக்கும் அந்த வீடியோவை பகிர்ந்த நடிகை ராஷ்மிகா மந்தனா இந்த வீடியோவில் இருக்கும் சிறுமியை நான் எப்படிச் சந்திப்பது என்று கேட்டு அங்கே வீடியோவின் கீழே இணைத்துப் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோவை தேஜா என்னும் பெயருடைய டிவிட்டர் யூசர் ஒருவர் பதிவேற்றம் செய்து அதில் நடிகை ராஸ்மிகா மந்தனாவையும் டேக் செய்துள்ளார். அந்த சிறுமி தன்னுடைய பள்ளி சீருடையில் குழுவாக நின்று கொண்டு நடனம் ஆடுகிறார்.

பள்ளிச் சீருடையில் சுட்டித்தனமாக ஆடும் அந்த சிறுமி ராஷ்மிகா மந்தனாவின் பிரத்யேக ஸ்டெப்பை போட்டு தனக்கே உரிய மழலையின் உடல் மொழியில் மிக அழகாக ஆடியுள்ளார். ரஷ்மிகா மந்தனா தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து இந்த சிறுமியைச் சந்திக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

Also Read : உக்ரைன் வானில் ஏலியன் யூஎப்ஓ?..வானியல் ஆய்வாளர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

புதன்கிழமை பதிவேற்றம் செய்யப்பட்ட இந்த சிறிய வீடியோ விரைவிலேயே 6 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரால் பார்க்கப்பட்டு உள்ளது. மேலும் நேபாள சுற்றுலா வாரியமும் அந்த சிறுமியின் இந்த வீடியோவை தனது பக்கத்தில் பகிர்ந்துள்ளது. மேலும் அந்த சிறுமி நேபாள நாட்டின் “ஹெட்டாவுடா” என்ற பகுதியைச் சேர்ந்தவர் என்றும் உங்களை அந்த சிறுமியோடு சேர்ந்து மொத்த நேபாள நாடும் வரவேற்கிறது என்று அந்த ட்வீட்டில் தெரிவித்துள்ளனர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.





Source link

Leave a Reply

Your email address will not be published.