கொரோனா லாக்டவுனின் போது நெட் பிளிக்ஸ் தளத்திற்கான மவுசு கிடுகிடுவென உயர்ந்தது. இதனால் 2021ம் ஆண்டின் இறுதியில் உலக அளவில் 22 கோடி சந்தாதார்களை நெட் பிளிக்ஸ் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
குறிப்பாக அமேசான் ப்ரைம், டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார், ஜீ5 என ஏராளமான ஓடிடி தளங்கள் இந்தியாவில் இருந்தாலும், நெட் பிளிக்ஸ் தளமே அதிக வாடிக்கையாளர்களால் விரும்பப்பட்டு வருகிறது.
எனவே தான் இந்திய வாடிக்கையாளர்களை கவரும் வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கட்டண சலுகைகளையும் நெட்பிளிக்ஸ் அறிவித்தது. இதனால் வாடிக்கையாளர்கள் குஷியான நிலையில், கொடுத்ததை விட பெரிய குண்டை தூக்கிப் போட்டது. அதாவது இந்தியாவில் Sub-Accounts என்ற கட்டண முறையை கொண்டு வர உள்ளதாக நெட் பிளிக்ஸ் நிறுவனம் அறிவித்தது. அதாவது நெட்பிளிக்ஸ் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர் அதன் பாஸ்வேர்டை நண்பர்கள் அல்லது உறவினர்களுடன் பகிரும்போது அதற்கான கூடுதல் சந்தா கட்டணம் வசூலிக்கப்படும் என்ற அதிர்ச்சி செய்தியை வெளியிட்டது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் மட்டும் 25 லட்சத்துக்கும் அதிகமான சந்தாதாரர்களை நெட்பிளிக்ஸ் பெற்றுள்ளது. பார்வையாளர்கள் அதிகரித்து வரும் சூழலில், வருவாயை மேலும் அதிகரிக்க நெட் பிளிக்ஸ் புதிய திட்டங்களை வகுத்து வருகிறது. அதன் படி குடும்ப உறுப்பினர்கள் அல்லாத பிறருடன் பாஸ்வேர்டை ஷேர் செய்தால் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பு அதிர்ச்சியை உருவாக்கியது.
Also Read : நெட்பிளிக்ஸ் இலவசமாக வேண்டுமா – ஏர்டெல்லின் அசத்தலான 2 பிளான்கள்
இதுகுறித்து Netflix இன் தயாரிப்பு மற்றும் கண்டுபிடிப்பு இயக்குனர் செங்கி லெங்தி வெளியிட்ட அறிவிப்பில், “எங்கள் பொதுவான மற்றும் பிரீமியம் திட்டங்களில் தனித்தனி சுயவிவரங்கள் மற்றும் பல ஸ்ட்ரீம்கள் போன்ற விருப்பங்களுடன், ஒரே குடும்பத்தில் வசிக்கும் தனித்தனி நபர்கள் தங்களுக்குள் நெட்பிளிக்ஸ் அக்கவுண்ட் பாஸ்வேர்டை பகிர்ந்து கொள்வதை அனுமதித்துள்ளோம். இதனால் நெட்பிளிக்ஸ் பாஸ்வேர்டை யார் வேண்டுமானாலும் ஷேர் செய்து கொள்ளலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. இதனால் புதிய வெப் சீரிஸ் மற்றும் திரைப்படங்களை சொந்தமாக தயாரிப்பதற்கான எங்களுடைய நிதி திறன் பாதிக்கப்படுகிறது” எனக்குறிப்பிட்டிருந்தார்.
Also Read : 34 வயது நபரின் உயிரைக் காத்த ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச்…
இதனால் கடுப்பான சந்தாதாரர்கள் நெட் பிளிக்ஸ் நிறுவனம் 2017ம் ஆண்டு வெளியிட்ட ட்வீட்டை ஷேர் செய்து பங்கமாக கலாய்த்து வருகின்றனர். “Love is sharing a password” என்ற பழைய ட்வீட்டை மீண்டும் பதிவிட்டு நெட்டிசன்கள் நெட்பிளிக்ஸ் நிறுவனத்தை கண்டபடி வறுத்தெடுத்து வருகின்றனர். வந்த புதிதில் கடவுச்சொற்களை யார் உடன் வேண்டுமானாலும் ஷேர் செய்து கொள்ளும் படி பழக்கப்படுத்துவிட்டு, தற்போது தனது வியாபார தந்திரத்தை நெட்பிளிக்ஸ் களமிறக்கியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
— Poorly Aged Things (@PoorlyAgedStuff) March 21, 2022
Must’ve broken up. #dang https://t.co/3FJx8tBCqm
— Ian Strange (@IanStrvnge) March 23, 2022
Except when it gets in the way of profits https://t.co/wA5MGRoPYn
— Scragmeat and bacon (@Scragmeat) March 23, 2022
இந்தியாவில் பெரும்பாலானோர் தங்களது நெட்பிளிக்ஸ் அக்கவுண்ட் பாஸ்வேர்டை நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் ஷேர் செய்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்நிலையில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் இவ்வாறு திடீரென அறிவித்தது சந்தாதாரர்களை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. எனவே தான் 2017ம் ஆண்டு நெட்பிளிக்ஸ் பதிவிட்ட பழைய ட்வீட் ஸ்கிரீன் ஷாட்டை ட்விட்டரில் பகிர்ந்து நெட்டிசன்கள் தாறுமாறாக ட்ரால் செய்து வருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.