Tamil News

No Holiday Schools And Colleges on November 19 In Tamil Nadu | நவம்பர் 19-ம் தேதி விடுமுறை கிடையாது! பள்ளி, கல்லூரிகள் இயங்கும் -தமிழக அரசு


சென்னை: தமிழகத்தில் வரும் நவம்பர் 19 ஆம் தேதி (சனிக்கிழமை) அன்று விடுமுறை கிடையாது எனவும், அனைத்து பள்ளி, கல்லூரிகளும் இயங்கும் எனவும்  தமிழக அரசு அறிவித்துள்ளது. அதாவது அன்று வேலை நாள் என்று என்று அறிவிகப்பட்டு உள்ளது.

இந்த அறிவிப்பு ஏனென்றால், தீபாவளி பண்டிகை நாளான அக்டோபர் 24 ஆம் தேதி விடுமுறையுடன் சேர்ந்து, அடுத்த நாள், அதாவது அக்டோபர் 25 ஆம் தேதி கூடுதலாக ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டது. அந்த விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு நவம்பர் 19 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

மறுபுறம் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தெற்கு வங்கக் கடல் பகுதியில் வலுப்பெறக்கூடும் என்பதால், தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி வரை இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

அதேபோல கனமழை காரணமாக தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறவிருந்த தட்டச்சு தேர்வுகள் நவம்பர் 19 மற்றும் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு என அறிவிப்பு.

மேலும் படிக்க: தமிழகத்தில் மீண்டும் கனமழை எச்சரிக்கை

மேலும் படிக்க: சுகாதாரமற்ற நிலையில் குழந்தைகளை பராமரிப்பதா? மாநில மனித உரிமைகள் ஆணையம் வழக்குப்பதிவு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ





Source link

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments