Tamil Entrepreneurs

Odisha Man Marries Trans Woman With His Wife’s Blessings | கணவரின் ஆசைக்காக திருநங்கையை திருமணம் செய்து வைத்த மனைவி


சமூகத்தில் எத்தனை மாற்றங்கள் வந்தாலும் சிலவற்றை யாராலும் மாற்ற முடியாது. அதில் ஒன்று தான் திருநங்கைகள் மீதான பார்வை. பெண்பால் உணர்வுடன் திருநங்கையாக மாறும் ஆண்கள் சமூகத்தில் பல கேளி, கிண்டலுக்கு ஆளாகின்றனர். நாங்களும் மனிதர்கள் தானே? என்ன செய்வது எங்களின் ஹார்மோன்களின் மாற்றத்தினால் ஏற்பட்ட விளைவு இப்ப நாங்கள் திருநங்கைகளாக மாறியுள்ளோம்.. இதுப் போன்று எத்தனை வார்த்தைகளைக் கொட்டித் தீர்த்தாலும் மக்கள் மனநிலை மாறப்போவதில்லை.

இந்நிலையில் தான் ஒடிசா மாநிலத்தில் அரங்கேறிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்படி என்ன நடந்தது என கேட்கிறீர்களா? கணவரை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என பிடிவாதத்துடன் இருக்கும் மனைவிகளுக்கு மத்தியில் என் கணவர் ஆசைப்பட்டாரு.. அதான் திருநங்கையை என் சம்மதத்துடன் திருமணம் செய்து வைக்கிறோம் என்று யாதார்த்தாமாக பேசியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.யார்? எங்கே? வாங்க நாமும் தெரிஞ்சுக்குவோம்.

ஒடிசா மாநிலத்தில் காலஹந்தி மாவட்டத்தைச் சேர்ந்தவர் தான் 32 வயதான பகீர். இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். கூலி தொழிலாக இருந்தாலும் தன்னுடைய குடும்பத்தை மகிழ்ச்சியாக நடத்தி வந்துள்ளார். இச்சூழலில் தான் பகீர் என்பவருக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்னதாக சங்கீதா என்ற திருநங்கையுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நண்பர்களாக பழகி வந்த நிலையில் இருவருக்கும் இடையே நாளடைவில் காதல் மலர்ந்துவிட்டது. தன்னுடைய மனைவிக்கு தெரியாமல் ரகசியமாக சந்தித்து பேசி வந்த இவர், ஒரு நாள் கையும் காலுமாக தன்னுடைய மனைவியிடம் மாட்டிக் கொண்டார் பகீர்.

 

பகீர் தனது மனைவியிடம் “தான் சங்கீதா என்ற திருநங்கையை காதலிப்பதாகவும் திருமணம் செய்துக் கொள்ள ஆசைப்படுவதாகவும் கூறியுள்ளார்“. இதனையடுத்து எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல் கணவரின் காதலை ஏற்றுக்கொள்வதாகவும் தானே திருமணம் செய்து வைப்பதாகவும் மனைவி கூறி இருக்கிறார். இதனையடுத்து சில நாள்களிலேயே அப்பகுதியில் உள்ள திருநங்கைகள் உறவினர்கள் படை சூழ கோவிலில் பகீர் தனது மனைவி முன்னிலையில் திருநங்கை சஙகீதாவை திருமணம் செய்துக் கொண்டார். தற்போது இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.

Also Read : திருட முற்பட்டபோது உடனடி கர்மவினைப் பயனை அனுபவித்த பெண் – வீடியோ வைரல்!

இச்சம்பவம் தான் தற்போது பெரும் பேச்சுப்பொருளாக மாறியுள்ளது. கணவரின் சந்தோஷத்திற்காக இதுபோன்ற முறையை பின்பற்றலாமா? என்றும் கருத்துக்களை நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.

Also Read : 9 வினாடிகளில் ஆந்தை கூட்டத்திற்கு மத்தியில் இருக்கும் பூனையை கண்டுபிடித்தால் நீங்கள் கில்லாடி தான்!

மேலும் ஒருவர் இரண்டாவது திருமணம் செய்ய வேண்டும் என்றால், முறைப்படி விவாகரத்து வாங்கியிருக்க வேண்டும்? வாங்கினாரா? என்பது போன்ற கருத்துக்களையும் தெரவிக்கின்றனர். பலர் இத்திருமணத்தை வாழ்த்தினாலும் பலர் திட்டித்தீர்க்கின்றனர். யார் என்ன சொன்னாலும் நாங்கள் மகிழ்வோடு தான் வாழ்வதாக தெரிவிக்கிறார் திருநங்கையைத் திருமணம் செய்த பகீர்..

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.Source link

Leave a Reply

Your email address will not be published.