Tamil Entrepreneurs

One Thing You Wish Your Were Taught In School”. Harsh Goenka Gets Amazing Replies – News18 Tamil


பிரபலங்களின் சில டிவீட்டுகள் மிகப்பெரிய அளவுக்கு வைரலாகும். வேடிக்கை, நகைச்சுவை, நையாண்டி என்பதைத் தாண்டி, சில டிவீட்கள் புதிய மாற்றத்தை ஏற்படுத்துவதாக அமையும். இந்தியாவின் வணிக சாம்ராஜ்யங்களை நடத்தி வரும், பெரும் பணக்காரர்களில் ஒருவரான ஹர்ஷ் கோயன்கா அற்புதமான கேள்வி ஒன்று டிவீட் செய்திருந்தார்.

அதற்கு, டிவிட்டர் யூசர்கள் வரிந்து கட்டிக்கொண்டு பதில் கூறியிருக்கிறார்கள். இதன் மூலம், நமக்கு பள்ளிக்கல்வியில் எது சேர்க்க வேண்டும் என்று தெளிவாக புரியும்!

பள்ளியில் படித்தது எல்லாம் வாழ்க்கைக்கு உதவுகிறதா என்ற கேள்வி பெரும்பாலானவர்களுக்கு இருக்கும்! படித்தது ஒன்று, பார்க்கும் வேலை ஒன்று, படிப்புக்கும் வேலைக்குமே சம்மந்தம் இல்லை. பள்ளியில் படித்த பாட புத்தகங்களை தவிர்த்து பள்ளியில் இதையெல்லாம் படித்திருக்கலாமே, வாழ்க்கைக்குத் தேவையானவற்றை கற்றுக் கொடுத்திருக்கலாமே என்று பலரும் அவ்வப்போது சிந்திப்போம்.

உதாரணமாக கணக்கை எடுத்துக்கொண்டால், கூட்டல் கழித்தல் வகுத்தல் பெருக்கல் தவிர்த்து கணக்கில் எவ்வளவோ விஷயங்கள் உள்ளன. அதையெல்லாம் நாம் எத்தனைமுறை வாழ்க்கையில் பயன்படுத்துகிறோம் என்று கணக்கையே உதாரணமாக பலரும் கூறுவார்கள்.

ஹர்ஷ் கோயன்கா, பள்ளியில் உங்களுக்கு எதையெல்லாம் சொல்லிக் கொடுத்திருக்கலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று ஒரு ட்வீட்டை பகிர்ந்து இருந்தார்.

யூசர்கள் பதிலை வாரி வழங்கி இருக்கிறார்கள். ஒரு சிலருடைய பதில்கள் ரசனையாகவும் இருக்கிறது, ஒரு சில பதில்கள் வேடிக்கையாகவும் இருக்கிறது. இவற்றில் பெரும்பாலான பதில்களில் உண்மை இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

அதில் பெரும்பாலானவர்கள் கூறியது – ஆங்கிலத்தில் உரையாடுவது மற்றும் நிதி நிர்வாகம் ஆகிய இரண்டையும் குறிப்பிட்டிருந்தார்கள்.

ஆங்கிலம் மீடியம் பள்ளிகளில் எவ்வாறு ஆங்கிலத்தில் உரையாட வேண்டும் என்று கற்றுத்தருவதில்லை, அதை முக்கியமான விஷயமாக சேர்க்க வேண்டும், பள்ளியில் அது இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று யூசர் டிவீட் செய்திருந்தார்.

இதுவரை, நிதி நிர்வாகம், பணம் பற்றி பள்ளியில் மாணவர்களுக்கு கற்றுத் தர வேண்டும் ஏன் யாருக்கும் தோன்றவே இல்லை என்று இளம் வயதிலேயே பணம், நிதி மேலாண்மை பற்றிய அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு பெண் ட்வீட் செய்திருந்தார்.

பலரும், சேமிப்பு, முதலீடு, எதிர்காலத்துக்கான திட்டமிடல் ஆகியவற்றை பள்ளியில் கற்றுத்தர வேண்டும் என்று கிட்டத்தட்ட ஒரே மாதிரியான கருத்தை பதிவு செய்திருந்தார்கள்.

பணத்தை எப்படி நிர்வகிப்பது, எவ்வாறு பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சரியான முடிவெடுப்பது என்பதைப் பற்றி பள்ளிகளில் கட்டாயமாக சொல்லித்தர வேண்டும்; எந்த வேலையில், வணிகத்தில் அல்லது தொழிலில் இருந்தாலுமே, அதை சரியாகப் பயன்படுத்தி எதிர்காலத்தை வளமாக திட்டமிடுவதற்கு இந்த ஒரு விஷயம் மிகவும் முக்கியம். இது இல்லாமல் தான் பலரும் திணறுகிறார்கள் என்று ஒரு நபர் ட்வீட் செய்திருந்தார்.

இந்த இரண்டு விஷயங்களையும் தவிர்த்து, ஒரு நபர், மன நலத்தை எவ்வாறு ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது என்பதையும் கற்றுத் தர வேண்டும் என்று கூறப்பட்டது. உடல் மற்றும் மன நலத்தின் முக்கியத்துவத்தை பாடங்களில் சேர்க்க வேண்டும் என்று பலரும் தெரிவித்திருந்தனர்.

ஆனால், இதில் ஒரு குட்டி டிவிஸ்ட்டாக ஒரு யூசரின் பதில் இருந்தது. பாட புத்தகங்களில் படிப்பது மட்டும் தான் அறிவு என்பது இல்லாமல், படிப்பு சம்பந்தப்பட்ட வேலையைத் தேடாமல் தனக்கு பிடித்த விஷயத்தை செய்வதை பற்றி, தான் விரும்பும் விஷயத்தில் தன்னுடைய ஆர்வத்தை வளர்த்துக் கொள்வது பற்றி பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

பள்ளியில் உங்களுக்கு என்ன கற்றுக் கொடுத்திருக்கலாம் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?

 

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.





Source link

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments